Ad Widget

கருணா, கே.பி.க்கு சுகபோகம்..! அரசியல் கைதிகளுக்கு தொடர்ந்தும் சிறை – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

கருணா மற்றும் கே.பி. போன்றவர்கள் அமைச்சு பதவியிலும் அரசின் பாதுகாப்பிலும் இருக்கலாம் என்றால், ஏன் சிறு சிறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யபடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு பங்களிப்பு செய்தார்கள் அல்லது உதவிகளை புரிந்ததாக தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் விடுதலைப்புலி உறுப்பினர்களை பயிறுவித்தவர்கள் அவர்களை வழிநடத்தியவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்திருக்கின்றார்கள்.

குறிப்பாக விநாயகமூர்த்தி முரளிதரன் என கூறப்படும் கருணா அம்மான் என்பவர் தமிழீழ விடுதலை புலி அமைப்பின் தளபதியாக செயற்பட்டவர்.

இப்படி கட்டளையிட்டவர்களுக்கு பிரதி அமைச்சு பதவி கொடுக்க முடியும் என்றால் ஏன் சாதாரண உதவி செய்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு குறுகியகால புனர்வாழ்வினை வழங்கி விடுதலை செய்யமுடியாது?

மேலும் கே.பி. என்பவரை சர்வதேசத்தில் இருந்து அழைத்து அவருக்கு இலங்கையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏன் அவர் விடுதலைப்புலி உறுப்பினர் இல்லையா?

ஆனால் கே.பி என்பவரை சந்திப்பதற்காக மலேசிய சென்ற 3 பேர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.” என அவர் கூறினார்.

Related Posts