Ad Widget

எமது மக்களை சுயகௌரவத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ வழிவகுக்க வாழ்த்துகின்றேன் – முதலமைச்சர்

தொழில் முயற்சியாண்மையை ஆதரிப்பதை போன்று அரசியலிலும் எமது முயற்சியாண்மையை ஆதரிக்க முன்வாருங்கள் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ‘இலங்கை முயற்சியாண்மை’ தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) யாழில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டப்பத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சுயாட்சி தந்து எம்மை நாமே ஆள விடுங்கள் என்று அரசியலில் நாம் கோருகின்றோம். நீங்கள் மத்தியில் இருந்து தாய்க் கோழி குஞ்சுகள் வளர்வதைப் பக்குவமாய்ப் பார்த்து வருவது போல் எங்களைப் பார்த்து வாருங்கள் என்றே எமது அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றோம்.

இன்று தொழில் முயற்சியாண்மையை ஆதரிக்கும் நீங்கள் அரசியலிலும் எமது முயற்சியாண்மையை ஆதரிக்க முன்வர வேண்டும். நாங்கள் பிரிந்து சென்று விடுவோம் என்ற கருத்துக்கு இடமில்லை. ‘இலங்கை முயற்சியாண்மை’ என்ற சிறுதொழில், மத்திம தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கி ஊக்குவிக்கும் இந்த செயற்பாடு மேலும் மேலும் வளர்ச்சியடைந்து எமது மக்களை சுயகௌரவத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ வழிவகுக்க வாழ்த்துகின்றேன்.

இந்தக் கருத்தை எமது அரசியல் யாப்பிலும் உள்ளடக்கி பிராந்திய சுயாட்சியை உத்தரவாதப்படுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க முன்வர வேண்டும்.

Related Posts