Ad Widget

உலகில் நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை: இலங்கை நான்காவது இடத்தில்

நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை என்ற வேகத்தில் உலகில் தற்கொலைகள் நடக்கின்றன. (more…)

இந்திய பிரதமரை விக்னேஸ்வரன் சந்திக்க இலங்கை அரசின் அனுமதி அவசியம்

இலங்கையின் வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டுமானால் அவர் அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியம் என்று இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

நான் படத்தின் 3–ம் பாகம் எடுப்பேன் – விஜய் ஆண்டனி

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘சலீம்’ படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் நாயகியாக அக்ஷா பர்தசானி, நடித்துள்ளார். நிர்மல் குமார் இயக்கியுள்ளார். (more…)

10 பக்க சாட்சியங்களை அனுப்புவேன்: சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் அடங்கிய 10 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களை, ஐ.நா விசாரணைக் குழுவுக்கு அனுப்பவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (04) தெரிவித்தார். (more…)

அல்-கொய்தாவின் அறிவிப்பு: இலங்கை தீவிர கவனம்

அல்-கொய்தா அமைப்பின் பிரிவை இந்திய துணைக்கண்டத்திலும் அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று கூட்டுப்பிரார்த்தனை

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றினை இன்று மேற்கொள்ள உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (more…)

நிலக்கடலை பிரித்தெடுக்கும் ஜப்பானிய இயந்திரம் முல்லை மாவட்டத்தில் அறிமுகம்

நிலக்கடலைச் செடியில் இருந்து நிலக்கடலைகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் சேவையை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் புதன் கிழமை (03.04.2014) முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்துள்ளார். (more…)

விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

கைதடி சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் இன்று (04) மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இலங்கையர் நலனில் அமெரிக்காவின் அக்கறை தொடரும்

இலங்கை மக்களின் நலனின் அமெரிக்க கொண்டுள்ள அக்கறையில் ஒரு போதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம செயற்றிட்டப் பொறுப்பாளர் அன்ரூ மன் வியாழக்கிழமை (04) தெரிவித்தார். (more…)

வெலிஓயாவால் கோபமடைந்த முதலமைச்சர் சி.வி

வர்த்தகமானியில் குறிப்பிடப்படாத ஒரு பிரதேசத்தை, பிரதேச செயலகமாக உருவாக்கி, அதற்கு சகல உதவிகளையும் எவ்வாறு வழங்கி வருகின்றீர்கள் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் வெலிஓயா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். (more…)

கண்ணிவெடி அகற்றிய காணிகளில் வெடிபொருட்கள்! : முதலமைச்சரிடம் முறையிட்ட மக்கள்

மாதகல் மேற்கு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் வெடிபொருட்கள் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர். (more…)

வெளிநாடுகளால் கிடைக்கும் உதவிகளுக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் – முதலமைச்சர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு தான் உதவிகள் தேவை. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் வேளை எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் (more…)

மக்களுக்கு சேவை புரிய அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைய வேண்டும்

மக்களுக்கான சிறந்த சேவைகளை ஆற்றுவதற்கு அரசியல் பிரமுகர்களும், அரசாங்க உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

எரிபொருள் நிரப்பும்போது தீப்பற்றிய முச்சக்கரவண்டி – சாரதி படுகாயம்

கல்வியங்காடு சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பச் சென்ற முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி எரிந்ததில் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது. (more…)

வறட்சியால் சிறுகடற்றொழில் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. (more…)

பொலிஸாருக்கு எதிராக 14 முறைப்பாடுகள்

வடமாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொலிஸாருக்கு எதிராக, பொதுமக்களால் 14 முறைப்பாடுகள் கடந்த 8 மாதங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, (more…)

வெலிஓயா, முல்லைத்தீவுக்கு வேண்டாம் : அன்ரனி ஜெகநாதன்

தேர்தலில் வாக்களிப்பதற்கு அநுராதபுரம், திருகோணமலை மற்றும் வவுனியா செல்லும் வெலிஓயா பகுதி மக்களை ஏன் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்தது என்பது தொடர்பில் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். (more…)

ஐ.நா விசாரணைக்கு சாட்சியமளிப்பதற்கான மாதிரிப் படிவம் வெளியீடு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விசாரணைக் குழுவிடம், சாட்சியமளிக்கும் வழிமுறைகள் அடங்கிய (more…)

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்- ருவன் வணிகசூரிய

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

மாவிட்டபுரத்தில் ஆளுநர் நிதியத்திலிருந்து பல்வேறு உதவித் திட்டங்கள்

வடக்கு மாகாண ஆளுநரால் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து நேற்று புதன்கிழமை பல்வேறு உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts