Ad Widget

ஜனாதிபதியின் பிறந்த நாள் : அங்கஜன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 69ஆவது பிறந்தநாள் மற்றும் பதவியேற்ற நாளை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வாழ்வு சுபீட்சம் பெறவும் பணிகள் சிறக்கவும் 18.11.2014 இன்றைய தினம் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் 14 ஆலயங்களில் பூஜை வழிபாடுகளும் அன்னதானமும் இன்னும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ் மாவட்டத்தில் உள்ள செல்வ சந்நிதி முருகன் கோவில் கச்சாய் அம்மன் கோவில் (சாவகச்சேரி) மூளாய் பிள்ளையார் கோவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் . தம்பட்டி ஆம்மன் கோவில் ( நராந்தனை) கைலாசப்பிள்ளையார் கோவில் (யாழ்ப்பாணம்)கோண்டாவில் பேருந்து நிலையம் துன்னாலை கலிகை முருகன் கோவில் கீரிமலை சிவன் கோவில்
அரியாலை வேதாவியார் கோவில் வேவில் பிள்ளையார் கோவில் (வல்வெட்டித்துறை)நாகவிகாரை நயீனா தீவு கிளிநகர் சித்திவிநாயகர் ஆலயம் போன்ற ஆலங்களுக்கு விஜயம் செய்ததுடன் அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டார்.

இதன் போது மக்களிற்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன்

இந்நாட்டை பல்வேறு வகையிலான அபிவிருத்தி திட்டங்களில் முன்னேற்றிச் சென்ற எமது மாண்புமிகு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினம் இன்று ஆகும். ஆதை நாம் அனைவரும் இணைந்து கொண்டாடி வருகின்றோம். அத்துடன் அவரது பணியானது மேலும் சிறக்க நாம் இறைவனை வேண்டிக் கொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும்.

இன்று எமது நாடானது அபிவிருத்தியை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் சமயத்தில் தொடர்ந்தும் அதை முன்னெடுத்து செல்ல எமது அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நலன் பெற்று வாழ நாம் வேண்டிக் கொள்வது அவசியமாகின்றது. எனக் குறிப்பிட்டார்

இந்நிகழ்வில் பல்வேறு பிரதேச பல தரப்பு மக்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

DSCF7202

DSCF7240

DSCF7312

DSCF7374

DSCF7408

DSCF7418

DSCF7554

Related Posts