- Sunday
- July 6th, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய கற்கை பீடங்கள், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன 600 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சற் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2012ஆம் ஆண்டு இந்த கற்கை பீடங்களை அமைப்பதற்காக வேண்டுகோள்...

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, பிரதம நீதியரசராக இன்று திங்கட்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொள்ள இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கைக்கு நாளை செவ்வாயக்கிழமை 13ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் விஜயத்தையொட்டி விசேட போக்குவரத்து ஒழுங்குகள்; மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பாதைகள் முற்றதாக மூடப்படவுள்ளதுடன் போக்குவரத்துக்காக அதிவேக நெடுஞ்சாலையை இந்த இரண்டுநாட்களுக்கு கட்டணமின்றி பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகபேச்சாளரும் சிரேஷ்ட் பொலிஷ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) நடைபெற்ற...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றியிருந்தது போன்று எருமை மாட்டுக் கூட்டமொன்றை அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டாம் என புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கோருகின்றோம். தேர்தலில் அடைந்த வெற்றிக்காக அவருக்கு எமது...

சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவிய அம்பாறை மாவட்ட த.தே.கூ எம்பி பியசேன சனாதிபதித்தேர்தலுக்கு முதல் நாள் முன்னால் த.தே.கூ எம்பி சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரியதாக சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் கூடியிருந்த இளைஞர்களும், ஆதரவாளர்களும் முன்னிலையில் மன்னிப்பும், அடைக்கலமும் கோரி தனது ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் முடிவுகளின் பின் தன்னை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இருப்பினும் தான் அவரை பண்பாட்டுக்கமைவாக உபசரித்து...

யாழ் குடாநாட்டில் நிலவும் சூழல் தொடர்பில் பொய் பிரச்சாரங்களை வௌியிடுபவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார். யாழில் எந்தவொரு வகையிலும் வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டில் உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் ரவி வைத்தியலங்கார...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை இறுதி முடிவுகள் வெளியாகவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடியுள்ள நிலையில் இந்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.மைத்திரிபால சிறிசேன...

தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் எமிரேட்ஸின் ஈ.கே.349 விமானத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான...

அரச ஊழியராக இருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல் சட்ட விதிகளை மீறும் விதத்தில் நேரடியாக அரசியலில் ஈடுபட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அரச ஊழியர்கள் எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இது முன்னெடுக்கப்படுகிறது. - இவ்வாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரும் எம்.பியுமான ராஜித...

தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தெரிவித்தார். தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை...

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னராக காலப்பகுதி மிகவும் அமைதியானதாக இருக்கின்றது. வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள இராணுவப்பேச்சாளர் ருவன் வணிகசூரிய, வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மீது கல்வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் எந்தவொரு இடத்திலேயேயும் விடுதலை புலிகளின் கொடி ஏற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கில்...

தேசிய அரசியலில் இணைவதற்கு புதிய அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர்கள் 60 பேர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரனுக்கு மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே...

பாதுகாப்பு அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யு.டி பஸ்நாயக்க நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பஸ் புதிய செயலராக நியமனம் பெற்ற பஸ்நாயக்க சுற்றுச்சூழல் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவத்தளபதி...

புதிய வடக்கு மாகாகண ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகிறது. எனினும் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இவர் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியின் கீழ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றியதுடன் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில்...

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணித் தலைவர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்தோ, மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தோ நீக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்தார். எனினும் கட்சியின் முடிவுகளை மீறி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சிக்கு நெருக்கடிகளை உருவாக்குவதாகவும், அது...

மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அர்ச்சுண மகேந்திரன் அல்லது இந்திரஜித் குமாரசுவாமி இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.அருச்சுணா மகேந்திரன், ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகார சபையின் தலைவராக கடைமையாற்றி இருந்தவர் என்பது...

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19 ஆம் திகதி - இன்னும் 9 நாள்களில் - ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன்பின்னர் தமது நம்பிக்கையான...

நாட்டின் ஏழாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். அந்த பதவிப்பிரமாண வைபவத்துக்காக 6,000ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக...

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

All posts loaded
No more posts