- Tuesday
- February 17th, 2026
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாகவும், அதிகபட்சமாக...
யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது. திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்...
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன. நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை 'எமது தலைவரே வருக' என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது....
90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார். இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம்...
அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களையும் பதிவு செய்யும்படி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தமிழ் கைதிகளினதும் விவரங்களை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர்...
பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, திங்கட்கிழமை(09) தெரிவித்தார். யாழ். பிரதேச செயலக புதிய கட்டட தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், பொதுமகனை...
பழைய பூங்கா வளாகத்தில் 48 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. சென்.ஜோன்ஸ் கல்லூரியில் வசதிகள் குன்றிய நிலையில இயங்கி வந்த...
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் அழகியற் பாட கற்கை நெறியை மீள ஆரம்பிக்கவேண்டியது அவசியம் என கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் திங்கட்கிழமை (09) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கல்வியற் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வந்த அழகியல் கற்கைநெறி கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்கை நெறியை கற்பதற்கு...
ஆலயமொன்றின் தேர் திருவிழாவுக்குச் சென்று காணாமற்போன எனது மகன் பற்றிய தகவல்கள் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளதாக தாய் ஒருவர் தெரிவித்தார். காணாற்போன மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாயொருவரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், எனது மகன்...
“பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கபட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானிக்க வில்லை. இராணுவத்தை குறைக்கும் தேவைப்பாடும் எமக்கு தற்போது இல்லை' என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். இதேவேளை, 'சர்வதேச நாடுகள் பல எமது பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகள் வழங்க தற்போது முன்வந்திருக்கின்றன. இது வரவேற்கதக்கதாகும்' என்றும் அவர் தெரிவித்தார். திருகோணமலைக்கு ஞாயிற்றுக்கிழமை(8)...
விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, ஜனாதிபதி செலவுக்கென கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு மற்றும் ஊழல் மோசடி உட்பட தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளித்து ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதில், '2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்கு 959 கோடி...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு தனக்கு இதுவரையிலும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பியை பார்வையிட்டதன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான், திஸ்ஸ அத்தநாயக்க, பிரேமலால் ஜயசேகர...
கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்களை பற்றி விசாரணை செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அடுத்தவாரம் நிறுவப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரலகங்விலவில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதவி, தராதரம், கட்சி மற்றும் நபர்கள் யாரென்று பார்க்காது இந்த ஆணைக்குழு செயற்படும். சொத்துக்களை...
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறப்பு...
மதவாச்சியில் இடம்பெற்ற லொறி விபத்தில் ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிக்கொண்டு வந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தண்டவாளங்களுக்குள் நசுங்குண்ட நிலையிலேயே அந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தில் காயமடைந்த 13 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...
மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் - என்ற தலைப்பில் கடந்த ஆண்டு மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த பிரேரணை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் விசேட...
சுன்னாகம், தெல்லிப்பளை பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக விரிவான விஞ்ஞான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாகப் பூரணமான ஆய்வு ஒன்றை நடாத்துவதற்கு வடக்குமாகாண முதல்வரின் பணிப்பின் பேரில் நிபுணர் குழு ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,கிழக்கு பல்கலைக்கழகம்,கொழும்புபல்கலைக்கழகம், மற்றும் பேராதனைபல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் இக்குழுவில்...
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை சீர்திருத்தம் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி தற்போது 60 பில்லியனால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை (6) நிபுணத்துவ சங்கங்கள் அமைப்பின் அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தொடரில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் போது நிதியமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து ஒப்பந்தக்காரர்களை அழைத்து...
மருதங்கேணி பிரதேச செயலகத்தின் திறப்பு விழாவை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். மருதங்கேணி (வடமராட்சி கிழக்கு) பிரதேச செயலக கட்டடத் திறப்பு விழா மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிகக்கார, வடமாகாண...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை இன்று திங்கட்கிழமை பார்வையிட்டார். திஸ்ஸ அத்தநாயக்கவுடன் சில நிமிடங்கள் உரையாடிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது...
Loading posts...
All posts loaded
No more posts
