Ad Widget

இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கவில்லை – ருவான் விஜேவர்த்தன

“பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கபட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானிக்க வில்லை. இராணுவத்தை குறைக்கும் தேவைப்பாடும் எமக்கு தற்போது இல்லை’ என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ruwan-vejayavarththana

இதேவேளை, ‘சர்வதேச நாடுகள் பல எமது பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகள் வழங்க தற்போது முன்வந்திருக்கின்றன. இது வரவேற்கதக்கதாகும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலைக்கு ஞாயிற்றுக்கிழமை(8) விஜயமேற்கொண்ட அமைச்சர், திருகோணமலை, இராணுவ முகாமான 22ஆம் படைப்பிரிவின் தலைமையகத்தில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டனர். அதன்பின் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘புகழ்பெற்ற திருகோணமலையையும் அதன் துறைமுகத்தையும் பாதுகாத்த பெருமை கடற்படை, தரைப்படை, விமானப்படைக்கே சாறும். யுத்தத்திலிருந்து மூவின மக்களையும் பாதகாத்த பாதுகாப்பு படையினரை இந்த இடத்தில் நாம் நினைவு கூறுகின்றோம். இலங்கையில் இடம்பெற்ற யத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களையும் நாம் இந்த வேளையில் நினைவு கூறுகின்றோம்.

இவர்களுடைய அர்ப்பணிப்பினால்தான் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் முழு இலங்கையிலும் சமாதானம் நிலவுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயக ரீதியான புதிய நாட்டை உருவாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

எமது தேசிய பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதே தற்போதைய தேவைப்பாடு. எனவே இதற்கு மாவீரர்களினதும் நாட்டுபற்றுள்ள அதிகாரிகளின் ஆலோசனைகளும் அவசியமாகும்.

சேவைக்கான கௌரவம் வழங்கப்பட வேண்டும். சில இராணுவத்தினரின் தவறான செயற்பாடுகளால் அவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.மூவின மக்களுக்கும் ஊறு விளைவிக்காத வண்ணம் இராணுவத்தின் செயற்பாடுகள் இருக்க வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலையிலுள்ள தரைப்படையின் 22ஆவது படைப்பிரிவுதலைமையகத்துக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயமெ் செய்ததுடன், அணிவகுப்பு மரியாதையினையும் ஏற்றுக் கொண்டார்

Related Posts