Ad Widget

அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, திங்கட்கிழமை(09) தெரிவித்தார்.

DSC00100

யாழ். பிரதேச செயலக புதிய கட்டட தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், பொதுமகனை ஒரு வேலைக்காக பல தடவைகள் அலைக்கழிக்காதீர்கள். அக்காரியத்தை செய்ய முடியாவிடின் ஏன் செய்ய முடியவில்லை என்று பதிவேடு வைத்து எழுதுங்கள்.

மக்கள் பல தரப்பட்ட தமது தேவைகளுக்காக உங்களை தேடி வருவது அவர்களது உரிமை. அதனை செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அவ்வாறு கிராம அலுவலரால் செய்ய முடியாத காரியத்தை பிரதேச செயலாளர் செய்து கொடுக்கவேண்டும்.
நீண்ட இடைவெளியின் பின் நாங்கள் மக்களுடன் கைகோர்த்துள்ளோம். நாங்கள் புதிய பொருளாதார கொள்கை நோக்கி செல்லவேண்டும். எமது வரவு – செலவுத திட்டம் அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமைந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

100 நாட்கள் வேலைத்திட்டம் சிறந்த முறையில் நடந்தேற அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

விஜயகலா தமிழ் பெண்மணியாக இருந்தாலும் அவரை நாட்டிலுள்ள அனைத்து பெண்களின் தலைவியாகவே பார்கின்றேன். அவர் தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றுவார் என்று நம்புகின்றேன் என்றார்.

Related Posts