இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா

இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு...

25 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணை பார்வையிட்டனர் வளலாய் மக்கள்!

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்த வலி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் கிராமத்தை 25 வருடங்களுக்கு பின்னர் பர்வையிட்டனர் அந்த கிராம மக்கள். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில நடைபெற்ற கூட்டத்தில எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது....
Ad Widget

13ஆவது திருத்தத்தில் இலங்கை பக்கமே இந்தியா நிற்கும் ரூபாவின் பெறுமதியை பலப்படுத்தவும் உதவி

இலங்கையின் புதிய சமாதான செயற்பாடுகள், இலங்கை தமிழர்களுக்கான சம அந்தஸ்து, 13ஆவது திருத்தம் மற்றும் அதனைவிடவும் மேலான விடங்களுக்காக இந்தியா, இலங்கையின் பக்கமே நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்பில்...

மஹாபோதி சங்கத்துக்கு மோடி விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மருதானையில் உள்ள மஹாபோதி சங்கத்துக்கு விஜயம் செய்தார்.

விபூசிகாவை விடுவிப்பதில் சிக்கல்

பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியை நம்பி, அவரது மகள் விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து வெளியில் எடுப்பதால், எதிர்காலத்தில் சிறுமி பாதிக்கப்படலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜெயக்குமாரி சார்பாக நேற்று வியாழக்கிழமை (12), நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளில் ஒருவர் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார்...

 இலங்கை-இந்தியாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. 1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம். 2.சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும்...

வீடு திரும்பினார் கடத்தப்பட்ட முன்னாள் பெண் போராளி!

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்களால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி வீடு திரும்பியுள்ளார். சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட பெண் போராளியே, முன்பள்ளிக்கு செல்லும் போது நேற்றுமுன்தினம் காலை கடத்தப்பட்டிருந்தார். இவர் தற்போது புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடத்தலுடன் தொடர்புபட்டவர்களும் இலங்கை...

ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தைடைந்த இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இனறு காலை இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது மீனவர்கள் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறப்படுகிறது. இதேவேளை இன்று...

ஜெயக்குமாரி விடுதலை அமெரிக்கா வரவேற்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார். தமிழ் சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை இது எனத் தெரிவித்த அவர் இலங்கையில மனித...

இலங்கை, இந்திய மீனவர்களில் 102 பேருக்கு விடுதலை

இருநாட்டு கடல் எல்லைகளையும் மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் இந்திய மீனவர்களில் 102 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த...

இந்திய வீட்டுத்திட்ட இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ளும் இராணுவம்

இந்திய நிதி உதவியில் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் இறுதிக் கட்டப் பணிகள், இராணுவத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை சனிக்கிழமை (14), யாழ்ப்பாணத்துக்கு வந்து மூன்று நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இந்நிகழ்வுகளின் ஒன்றாக, இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடொன்றையும் இந்திய...

வடக்கு, கிழக்கை பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் த.தே.கூ. க்கு இல்லை

வடக்கையும் கிழக்கையும் பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழன் தமிழனாக தன்மானத்துடன் சுயநிர்ணய ஆட்சியில் வாழ்வதே தமது நோக்கமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். சர்வதேச மகளிர்தின நிகழ்வு, மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் புதன்கிழமை...

கிழக்கு மாகாண ஆட்சியில் மீண்டும் குழப்பம்

இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் ஆளும் தரப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றது. ஏற்கனவே ஆளும் தரப்புக்கு ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் தமது ஆதரவை விலக்கிக் கொண்டு எதிர்கட்சியாக இயங்க முடிவு செய்துள்ளனர். குறித்த 10 பேரும் முன்னாள் அமைச்சர்...

நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்த​டைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரால் இந்திய பிரதமர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களை லண்டனில் சந்தித்தார் ஜனாதிபதி

யாழ் இந்துக் கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். லண்டனில் உள்ள பழைய மாணவர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கு பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டது. பிரித்தானியாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி பிரித்தானியாவின் பல அரசியல் உயரதிகாரிகளை சந்தித்திருந்த நிலையில்...

முன்னாள் பெண் போராளி புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்டார்!

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியொருவர் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே முன்னாள் பெண்போராளியான கைவேலி பகுதியைச் சேர்ந்த பெண்ணையே கடத்திச் சென்றுள்ளனர். தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்தார். நேற்றுக்காலை வழமை போலவே முன்பள்ளிக்கு...

தென்னிந்தியத் திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசனின் பவளவிழாவும் நூல் வெளியீடும்!

தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் பவளவிழா நேற்று புதன்கிழமை மாலை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி பீற்றோ மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பேராயரின் சகோதரன் அருட்பணி சு.மனோபவன் தலைமையில் அகவை வழிபாடு இடம்பெற்றது. இதில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண. கலாநிதி இராயப்பு யோசப் அருளுரை...

மணிக்கூட்டு வீதி கட்டுடைப்பு தொடர்பில் பொலிஸ் விசாரணை

யாழ்ப்பாணம், மணிக்கூட்டு வீதியின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்காரக் கட்டுக்களை உடைத்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (12) தெரிவித்தார். மணிக்கூட்டு கோபுர வீதியின் அழகுக்காக வீதியின் நடுவில் கட்டப்பட்டு இருந்த கட்டுக்களும் பூந்தொட்டிகளும் தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் யாழ்.மாநகர சபையால் நிர்மாணக்கப்பட்டு மின்விளக்குகளும்...

‘விபூசிகாவை விடுவிக்க தாய் வர வேண்டும்’

பாலேந்திரன் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்திலிருந்து நீதிமன்றத்தினூடாக விடுவிப்பதற்கு அவரது தாயார் ஜெயக்குமாரி கிளிநொச்சிக்கு வருகைதர வேண்டும் என கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி கூறினார். விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவிப்பதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (12) மனுத்தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில்...

மலக்கழிவை எரிக்கும் இயந்திரம் உருவாக்கம் – மாநகர சபை ஆணையாளர்

மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றினை தாம் உருவாக்கி வருவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் எஸ். பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாநகர சபை எல்லைக்குள் இருந்து அகற்றும் மலக்கழிவுகள் கடந்த காலங்களில் கல்லுண்டாய் வெளியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்புத்...
Loading posts...

All posts loaded

No more posts