- Saturday
- May 3rd, 2025

வடமாகாணத்தி உள்ள அரச காணிகளை தனியாருக்கோ வேறு அமைப்புக்களுக்கோ வழங்கும் போது வடமாகாண சபையின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என கோரி, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இக்கடிதம் நேற்று வியாழக்கிழமை (02) அனுப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான பயணம் அரசியல் ரீதியானது. எனவே, மக்களின் பிரதிநிதி என்ற முறையில் அவரது கூட்டங்களில் தான் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (02) தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

யாழ். பல்கலைக்கழக மருதனார் மட நுண்கலைபீடத்தின் சித்திரமும் வடிவமைத்தல் பிரிவுக்கு புதிய இணைப்பாளராக இசைத்துறை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சூரியகுமார் புதன்கிழமை (01) கலைப்பீட பீடதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மாணவர்களுக்கான வருட ஆய்வு கட்டுரைகள் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குரிய பொருத்தமான ஒருவரை நியமிக்கும் பொறுப்பு இணைப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட கேட்போர் அரங்கில் மாணவர்கள்,...

இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்து விடாதீர்கள் எனக் குறிப்பிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடிதம் ஒன்றை வெள்ளிக்கிழமை (03) அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் கடந்த பல நாட்களாக தங்களிடம் பல விடயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட...

வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில்...

வேலணை பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க உத்தரவிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், வேலணை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு, களவு மற்றும் சட்டவிரோத...

பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படும் WI-FI வசதிகள் தங்களுடைய அலைபேசிகள், கணினி உள்ளிட்ட சாதனங்களுக்கு பெற்றுகொள்வது பிரச்சினையாக இருந்தால் அது தொடர்பிலான வழிமுறைகளை 1919 என்ற இலக்கத்தை அழுத்துவதன் ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1919 யை அழுத்துவதன் ஊடாக அரச தகவல் மத்திய நிலையத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல்,...

வளலாய் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வளலாய் மீள்குடியேற்ற சங்கத்தலைவர் செல்லப்பு துரைரட்ணம், புதன்கிழமை (01) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 1990ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் மூடப்பட்ட இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் வளலாய் பகுதி மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை தமது...

'ஒரு சமூகத்தின் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திகழ்கின்றார். எ இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சகல தகுதிகளும் உண்டு என்பதை பெருமையுடன் நான் கூறிக்கொள்கின்றேன்' இவ்வாறு சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பட்டிப்பளை பிரதேசத்தில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள யுவதிகளுக்காக நடத்தப்பட்ட கைப்பணி...

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பேச்சியம்மன் கோயிலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் மரணமடைந்து விட்டதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (வயது 62) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா பயணம்...

யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் கல்வாரித் திருவிழா புனித வார நிகழ்வுகளாகப் பெரிய வியாழன்,பெரிய வெள்ளி, பெரிய சனி,உயிர்ப்பு ஞாயிறு,தியான திருச்சிலுவை வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இன்று பெரிய வியாழக்கிழமை மாலை 5மணிக்கு திருப்பலி, பாதம் கழுவுதல்,தேவ நற்கருணைப் பவனி, எழுந்தேற்றம் என்பன நிகழவுள்ளன. நாளை பெரிய வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு வார்த்தை வழிபாடு,திருச்சிலுவைஆராதனை என்பன...

மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். மகிந்த அரசின் கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர் உறவுகளைத் தொலைத்தனர், உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற...

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக...

யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை 0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. யேமனில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்கள் மூடப்பட்டு நாட்டில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய...

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணியும் சட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து அந்த தடைச்சட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சட்டம் கடந்த மார்ச் 21ஆம் திகதி அமுல்படுத்தப்படவிருந்த நிலையில், பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால், பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அத்திட்டத்தை...

கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியாவிலுள்ள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் புதன் கிழமை இரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து...

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 11 ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக, இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு" ஒன்று அமைக்கப்பட வேண்டும். இன, மத முரண்பாடுகளை வளர்ப்போர் மீது விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளதாக இருத்தல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்மொழிந்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள 19வது அரசியல் அமைப்புச்...

நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் இரண்டு விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ஒரு யாப்பின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்க வேண்டும் என்றும், அதற்கான...

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோருக்கு இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் உத்தரவுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும், மீன்பிடி அமைச்சின் செயலாளராக...

All posts loaded
No more posts