- Saturday
- May 3rd, 2025

வட மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்ட விடயம் தொடர்பில் வடக்கு ஆளுனர் செயலகத்தினால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. ஆளுனர் செயலகத்தின் ஊடக அறிக்கை - 04.04.2015 வடக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்டமை பற்றி ஊகத்தின் அடிப்படையிலான தவறான செய்திக் கட்டுரை...

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமை பின்தங்கிய பிரதேசமாகத் திகழும் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. குறிப்பிட்ட அரச உதவிகள் கிடைத்துள்ள...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04) இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள...

ஐக்கிய நாடுகளின் துணை பொதுச்செயலர் ஹவுலி யேங் சு, இலங்கைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்யவிருக்கின்றார். அவர், எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பார் என்று ஐ.நா.வின் கொழும்பு காரியாலயம் தெரிவித்தது. நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற புதிய அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டுகொள்வதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமுகத்தினரை சந்தித்து...

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிடுவோர் மற்றும் எழுதுவோருக்கு எதிராக இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான தீர்மானத்தை நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர்...

இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. அவரை ஆண்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய்...

இறுதிப்போர் தொடர்பான காட்சிகள் அடங்கிய அரசுக் கெதிரான இன வாத உணர்வுகளை தூண்டுகின்ற இறுவட்டுக்களை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் நீதிமன்றால் அந்தக் குற்றச்சாட்டி லிருந்து விடுவிக்கப்பட்டார். குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் தீர்ப்புக்காக எடுக்கப்பட்டது....

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்ததைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி முன்னாள் அதிபர்களில் ஒருவரான சபாலிங்கம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட சபாலிங்கம் அரங்கம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் முன்னாள் அதிபர்களில் ஒருவரான க.பொன்னம்பலத்தினால் திறந்து வைகப்பட்டது. முன்னதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இந்த...

உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மரு மகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்க, நைஜீரியாவில் இயங்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்திருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. [caption id="attachment_42831" align="aligncenter" width="494"]...

மஹிந்த ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது என்றும், இதுபற்றி ஆழமாக ஆராயப்படவேண்டும் என்றும் புதிய அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, "புலம்பெயர் அமைப்புகள் மீதும், தனிநபர்களுக்கு எதிராகவும்...

மானிப்பாய் பகுதியில் வெற்றுக்காணியில் இருந்து எஸ்.எஸ். ஈ. 87 ரக இரண்டு கைக்குண்டுகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு, இராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடை பகுதியில் கடந்த வியாழக்கிழமை குறித்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தோட்டக்காணிக்கு பக்கத்தில் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்ற போது, அங்கு இரண்டு கைக்குண்டுகள் இருப்பதை...

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மீனவப்படகுகளும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் கைதான மீனவர்களும் கைப்பற்றப்பட்ட படகுகளும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் புயல் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ நடித்து வரும் ’அன் இண்டியன்’ [Un indian] திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ முதல் முறையாக இந்தியாவை மையப்படுத்திய ”இந்தியன் அல்லாதவன்” [UNINDIAN] என்ற சினிமா படத்தில் நடத்தி வருகிறார்.அந்த திரைப்படத்தின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த...

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 7...

வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என,இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வா,தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீண்டும் ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்புக்கோ அல்லது...

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரகாரம் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.''என்று, ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

கிளிநொச்சி, முரசுமோட்டை நான்காம் கட்டைப்பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவரை வாகனம் ஒன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. முரசு மோட்டையிலுள்ள சங்கரநாராயணன் கோயிலில் தங்கியிருந்த இயக்கச்சியைச் சேர்ந்தவரான த.பொன்னுத்துரை (வயது-65 )என்பவரே உயிரிழந்தவராவார். அதிகாலை வயலுக்குச் செல்வதற்காக வீதியில் சென்றவரை பின்னால்...

இலங்கையில் வாழ்கின்றவர்கள், நாளை சனிக்கிழமை(04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான ஆர்தர் சி கிளார்க் மத்தியநிலையம் அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கே அரை சந்திர கிரகணம் தென்படும் என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. எனினும், சந்திர கிரகணத்தின் இறுதி இரவு 8 மணிவரையும் தென்படும் என்றும் அறிவித்துள்ளது. சந்திரன்...

தனது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதைக் கேள்வியுற்ற, பொலிஸ் காவலில் இருந்த கணவர் அங்கிருந்த போத்தலை உடைத்து தன்னை தானே குத்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். இந்த சம்பவம் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. கடந்த எட்டு மாதங்களுக்க முன்னர் இளவாலை, பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணுக்கும் வவுனியா...

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்து மீது மாலுசந்திப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் பேருந்தின் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தாக்குதல் தொடர்பில் பேருந்து சாரதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...

All posts loaded
No more posts