பேருந்து மீது கல் வீச்சு

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்து மீது மாலுசந்திப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் பேருந்தின் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

தாக்குதல் தொடர்பில் பேருந்து சாரதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts