ஐ.நா.வின் துணை பொதுச்செயலர் இன்று இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகளின் துணை பொதுச்செயலர் ஹவுலி யேங் சு, இலங்கைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்யவிருக்கின்றார்.

Haoliang Xu, UN Assistant Secretary General

அவர், எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பார் என்று ஐ.நா.வின் கொழும்பு காரியாலயம் தெரிவித்தது.

நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற புதிய அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டுகொள்வதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமுகத்தினரை சந்தித்து கருத்துக்களை பகிர்ந்துகொள்வார்.

அவர், வடமத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவிருக்கின்றார் என்றும் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related Posts