WI-FI பிரச்சினையா?: 1919 க்கு அழுத்தவும்

பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படும் WI-FI வசதிகள் தங்களுடைய அலைபேசிகள், கணினி உள்ளிட்ட சாதனங்களுக்கு பெற்றுகொள்வது பிரச்சினையாக இருந்தால் அது தொடர்பிலான வழிமுறைகளை 1919 என்ற இலக்கத்தை அழுத்துவதன் ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1919 யை அழுத்துவதன் ஊடாக அரச தகவல் மத்திய நிலையத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல், தொழிற்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.

அதனூடாக ஒருவருக்கு ஒரு நிமிடத்துக்கு கிலோபைட் 512 வேகத்துடன் கூடிய மாதத்துக்கு 100 மெஹாபைட் கொள்திறன் கொண்ட இணைய இணைப்பை இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல், தொழிற்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.

Related Posts