யாழ். பல்கலைக்கழக மருதனார் மட நுண்கலைபீடத்தின் சித்திரமும் வடிவமைத்தல் பிரிவுக்கு புதிய இணைப்பாளராக இசைத்துறை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சூரியகுமார் புதன்கிழமை (01) கலைப்பீட பீடதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாணவர்களுக்கான வருட ஆய்வு கட்டுரைகள் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குரிய பொருத்தமான ஒருவரை நியமிக்கும் பொறுப்பு இணைப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட கேட்போர் அரங்கில் மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்களுக்கு இடையிலான அவசர கலந்துரையாடல், கலைப்பீட பீடாதிபதி வீ.பி.சிவநாதன் தலைமையில் புதன்கிழமை (01) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, மாணவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பீடாதிபதி, கல்விசார் அனைத்து பிரச்சினைகளுக்கும் வெகு விரைவில் தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்தார். மருதனார் மட நுண்கலை பீட மாணவர்கள் பரீட்சைகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை.
தமது துறைக்கான இணைப்பாளரை நியமனம் செய்யவில்லை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரி வகுப்பு பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.