Ad Widget

உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியாவிலுள்ள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் புதன் கிழமை இரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து விட்டது.

சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியத்தில் தனது பெயரை எழுதியமையினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள உதயசிறிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல அமைப்புக்கள், மற்றும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இன மத பேதமில்லாது வேண்டுகோள் விடுத்திருந்தனர்

இந்த நிலையில் இவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதனிரவு கையொழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts