- Friday
- July 11th, 2025

புனித நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை நிகழ்வில் பங்கேற்ற முகமதியா ஜும்மா பள்ளிவாசல் பிரதான இமாம் எம்.ஐ மஹமூட் பலாஹி விசேட சொற்பொழிவை ஆற்றினார். இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி பவானி பசுபதிராஜா வருடாந்த இடமாற்ற அடிப்படையில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளர் நியமிக்கப்படும் வரை வைத்தியசாலையில் தற்போது பிரதிப் பணிப்பாளராக உள்ள மருத்துவர் கே. நந்தகுமார் பதில்பணிப்பாளராக கடமையாற்றுவார். வருடாந்த இடமாற்றம் இந்த வருட ஆரம்பத்தில்...

தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கு சர்வதேசத்தின் உதவி இன்றியமையாதது. இந்நிலையில் சர்வதேச ஆதரவைப் பெற்றிருக்கின்ற வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ரி.விக்கினராஜா தெரிவித்தார். கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவை வழங்கி சர்வதேசத்தையே வியக்க வைத்தது போன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலிலும் தமிழினத்தின் விடுதலைக்கான...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் கொலைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒருவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் போட்டியிட இடமளிக்கப்பட்டுள்ளது. முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த சுய விருப்பின் பேரில் இந்த இடத்தை வழங்கியுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கே...

நேற்றய தினம் பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முறையற்ற வர்த்தக நடவடிக்கை தொடர்பில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய வழக்காக காலாவதியான பொருட்கள் விற்பனை தொடர்பில் 11 கடை உரிமையாளர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் தண்டப்பணமும் அறவிடப்பட்டது. இவ்வாறு காலாவதியான பொருட்களில் அழகுசாதனப் பொருட்கள் ( பேஸ்வோஸ், கிறீம்) அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது. எனவே அழகுசாதனப் பொருட்களை கொள்வனவு...

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு மக்கள் முன்வந்து தெரிவிக்க வேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்துக்கும் உதயகுமார வூட்லருக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, உதயகுமார் வூட்லர் இந்த வெண்டுகோளை விடுத்துள்ளார். மதுபானம் அருந்திவிட்டு...

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை (17) மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறில், கத்திக் குத்துக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தந்தையான ராசலிங்கம் சாந்தரூபன் ( 28 வயது) என்பவர்...

பொதுத் தேவைக்கு எனக் கூறி காணி அமைச்சின் ஊடாக வலி. வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட 6 ஆயிரத்து 371 ஏக்கர் நிலத்திலும் இராணுவத்தினர் முகாம்களை மட்டும் அமைக்கவில்லை. 13 ஆடம்பர ஹோட்டல்களையும், 2 மாட்டுப் பண்ணைகளையும் அமைத்துள்ளனர். அத்துடன் விவசாய நிலங்களில் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் தனக்கு சார்பான 600 பேரை புலிகளுக்கு எதிராகப் போரிட அனுப்பினார் என்றும், அதில் தற்போது 300 பேரே எஞ்சியுள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். தேசியப் பட்டியலில் தனக்கு எம்.பி. பதவி தரப்படும் என ஶ்ரீலங்கா தேசியக் கட்சியின் பொதுச் செயலர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஐக்கிய...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது. இந்த விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள் பங்கேற்றன....

நோன்பின் மூலம் மனித உள்ளங்களை ஒன்றிணைக்கும் பயிற்சி புகட்டப் படுவதாக நோன்பு பொருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இன்றைய தினத்தில் ஈதுல் பித்ர் பண்டிகையை கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் அனைத்துலக முஸ்லிம் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த மாதமானது நோன்பு,...

பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் உண்மையான நோக்கம் என்னவென்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு போதிய விளக்கமில்லை என்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் நலனுக்காக மாத்திரம் நடைபெறும் தேரதல் அல்ல என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். நாத்தாண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே...

மக்கள் என்னுடன் இருக்கும் வரை எவருடைய குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளிக்கப் போவதில்லை. மக்கள் அதற்கு பதில் அளிப்பர் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

மீள்குடியமர்வு தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸநாயக்க இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளார். வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கமைய கடந்த மாதத்தின் இறுதியில், மீள்குடியேற்ற அமைச்சர் யாழ். வந்திருந்தார். இந்தப் பயணத்தின் போது வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள்...

முன்னாள் போராளிகளின் (ஜனநாயகப் போராளிகள் அமைப்பின்) தலமை வேட்பாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான (அண்மையில் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது நான் இப்போ ஊடகவியலாளன் அல்ல என கூறினார்) ந. வித்தியாதரன் யாழ் ஊடகங்களை மாபியா என குறிப்பிட்டு உள்ளதுடன் உதயன் பத்திரிகை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி எவ்.ரீ...

"பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயுதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும் - தீர்வைப் பெற்றுக்...

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி டபிள்யு ரி ஐ (WTI) வர்க்க மசகெண்ணெய் பெரல் ஒன்று 50.95 அமெரிக்க டொலருக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேன்ட் வர்க்க மசகு எண்ணெய் 57 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய், கேஸ், தங்கம், வெள்ளி என்பவற்றின் விலை...

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8...

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சினால் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இது பல்வேறு மட்டங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சில பாடசாலைகளின் அதிபர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக...

All posts loaded
No more posts