Ad Widget

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் 13 ஆடம்பர ஹோட்டல்கள்! 2 மாட்டுப்பண்ணைகள்!!

பொதுத் தேவைக்கு எனக் கூறி காணி அமைச்சின் ஊடாக வலி. வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட 6 ஆயிரத்து 371 ஏக்கர் நிலத்திலும் இராணுவத்தினர் முகாம்களை மட்டும் அமைக்கவில்லை. 13 ஆடம்பர ஹோட்டல்களையும், 2 மாட்டுப் பண்ணைகளையும் அமைத்துள்ளனர். அத்துடன் விவசாய நிலங்களில் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அவர் நடத்தினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் தெரிவிக்கையில்:-

உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி அபகரித்த காணிகளை இராணுவத்தினர் வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். அங்கு அவர்கள் 13 ஆடம்பர ஹோட்டல்கள், 2 மாட்டுப் பண்ணைகளை வைத்துள்ளனர். விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.அவை மக்களின் நிலங்கள் அவர்களுக்கே அவை திரும்பத் தரப்பட வேண்டும் – என்றும் அவர் கூறினார்.

Related Posts