- Saturday
- September 26th, 2026
ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஐ.நா. அறிக்கையின் சிபாரிசுகள் சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையிலேயே அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும்...
வலி வடக்கின் மீள் குடியேற்றம் மிகவிரைவில் இடம்பெறும் என, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் பணிப்பாளர் நாயகம் மாளியக்க தெரிவித்ததாக, வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கான மீள்குடியேற்றத் தலைவர் தனபாலசிங்கம் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். அப் பகுதியில் காணப்படும் துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதுறைகள் என்பன மிகவிரைவில் விடுவிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கு...
யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 05 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலன் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவகத்தின் ஏற்பாட்டிலும் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது....
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உட்பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 15 இந்திய மீனவர்கள் யாழ் பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் கடந்த 21 ஆம் திகதி இரவு யாழ் பருத்தித்துறைப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால்...
இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வரும் இரு தரப்பு மீனவர்களை இருநாட்டு கடற்படையோ, கடலோரக் காவல் படையோ தாக்கக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. "இந்திய - இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தை´ எனும் பெயரில் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச்...
இலங்கை இறுதிப் போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கையானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் சாதகமானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார். இறுதிப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை இலங்கையின் வட மாகாண சபையில் நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கான மக்களின்...
தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கே இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள்...
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போது உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத செயல்முறைகள் மீண்டும் நாட்டில் இடம்பெறாதிருக்க...
கம்பஹா கொடகதெனியா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் அண்மைக்காலத்தில் நாட்டின் பலபாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது தெரிவதே. அதேபோல் அளவெட்டியிலுள்ளவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் இளைஞர்களால்சோயாவின் துர்மரணம் சம்பந்தமாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி முன்றலில் இருந்து...
வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் பேசுவதற்கு 7 பட்டதாரிகள் மற்றும் 7 மாகாணசபை உறுப்பினர்கள் கொண்ட செயலணி உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாணசபை ஆளுகைக்குட்பட்ட வெற்றிடங்களை நிரப்புமாறு பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இன்று...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள...
தேசிய ஆள் அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களினால் தமது பாடசாலை அதிபர்களின் உறுதிப்படுத்தலுடன் கடந்த 30.03.2015 இற்குப் பின்னர் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பியமைக்கு அமைவாக மாணவர்களுக்கான தேசிய ஆள் அடையாள அட்டை மாணவர்களின் தனிப்பட்ட சொந்த முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன....
போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை உள்ளமை கண்டறியப்பட்ட எட்டு நிறுவனங்களுக்கு எதிராக இந்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதம் யாழ்.மாவட்டத்தில் விற்பனையாகும் குடிதண்ணீர்ப் போத்தல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் ஒன்பது நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட குடிதண்ணீர்ப் போத்தல்கள்...
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட 5 வயதான செயாசந்தவமியின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி வேண்டும்,குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம்' மற்றும் 'சிறுமியை கொலை செய்த கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' ஆகிய வாசகங்களை உள்ளடக்கிய...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (22) இரவு தொடக்கம் நாளை புதன்கிழமை (23) வரையில் கடலுக்குச் செல்லாமல் தவிர்ப்பதன் காரணமாக நாளை புதன்கிழமை (23) யாழ்ப்பாணச் சந்தைகளில் மீன் வரத்து இருக்காது. வடபகுதி கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கண்டித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம்,...
வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை முன்பாக இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. இன்று காலை 9.30 மணிக்கு வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாக இருந்த நிலையில், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்...
நீதிமன்றத்துக்கு சவால்விடும் சுன்னாகம் ரவுடிக் கும்பல்களை அடக்க உடனடியாக விசேட அதிரடிப்படையை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். ரவுடித்தனத்தில் ஈடுபடும் அனைவரையும் பொலிஸ் விசேட அதிரப்படையைப் பாவித்து கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு வட பிராந்திய...
யாழ்.நகரப்பகுதியில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் மோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியினைச் சேர்ந்த யாழ்.நகரில் உள்ள பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களான மாதவமணிவண்ணன் (வயது 44), மாதவமணிவண்ணன தர்சனி (வயது 41) என்னும் தம்பதிகளே மேற்படி தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களாவர். குறித்த சம்பவம் தொடர்பாக...
புகையிரத திணைக்களத்தினால் யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பிற்கும் கொழும்பு புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கும் இடையிலான நான்கு புகையிரத சேவைகளின் நேர அட்டவணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை தொடக்கம் மாற்றம் அடையவுள்ளதாக புகையிரத திணைக்களத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து...
Loading posts...
All posts loaded
No more posts
