Ad Widget

கல்லுண்டாய் கழிவு கொட்ட இடைக்கால தடை உத்தரவு

யாழ்.கல்லுண்டாய் வெளியில் 3 மாத காலத்துக்கு கழிவுகள் எவையும் கொட்டப்படக்கூடாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன் நேற்றைய தினம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்.கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கழிவுகள்கொட்டப் படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று கடந்த ஜனவரி மாதமளவில் பதிவுசெய்யப் பட்டது.

இதனடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரினால் கடந்த மார்ச் மாதம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இவ் வழக்கு நேற்றைய தினம் தீர்ப்புக்காக மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் எதிர்த்தரப்பி னராக யாழ்.மாநகரசபை, மானி ப்பாய் பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை, வலி.தெற்கு பிர தேச சபை, சுற்றுச்சூழல் அதி காரசபை, சகாதார பரிசோதக ர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது தீர்பளித்த நீதிபதி கல்லுண்டாய் வெளிப்ப குதியில் சுற்றுச்சூழல் அதிகார சபையின் நியமத்தின் அடிப்ப டையில் மாத்திரமே இனி கழி வுகள் கொட்டப்பட வேண்டும். கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மீள் சுழற்சி முறையினை பய ன்படுத்தி நவீனத்துவ முறையில் கழிவு கொட்டப்படும் நடவடிக் கைகள் உடனடியாக அப்பகுதி யில் மேற்கொள்ளப் படவேண்டும்.

அத்துடன் மாநகரசபை உள்ளுராட்சி சபைகள் தவிர் ந்த ஏனைய தனியார் துறையினர் இப் பகுதிக்குள் குப்பை கள்கொட்டக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

மேற்படி நடவடிக்கை களை அவதானித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண் டும் என்றும் குறித்த கட்ட ளையை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நீதிமன்றை அவமதித்ததாக குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவை பிரிவு 100 இன் கீழ் நடவடி க்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ் வழக்கு எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிப்பதற்கு மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related Posts