- Tuesday
- November 18th, 2025
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும்...
இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் சமபலத்தோடு போட்டியிடும் நிலையில், சிறுபான்மை மக்களாகிய நாம் நமது வாக்குகளைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் மூலம், நாம் இலங்கை அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கமுடியும். - இவ்வாறு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை சார்பாக...
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வியாழக்கிழமை (06) அதிகாலை சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ் மீது, மண்டான் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரும்பு துண்டு ஒன்றால் தாக்குதல் மேற்கொண்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இதனால் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடிகள் முற்றாகச் சேதமடைந்தது. பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில்...
நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும் பரிசாக வழங்கப்படும். பாராட்டுப் பெறும் பத்துக் கதைகளுக்கு, தலா 2000 ரூபாய்கள் வழங்கப்படும். போட்டி முடிவு திகதி 15.10.2015. மேலதிக விவரங்கள்...
பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் நாள் திறந்து...
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா இன்று காலை யாழ் கல்வியங்காட்டுப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப் பிரச்சார நடவடிக்கைகளை கல்வியங்காட்டு சந்தைப் பகுதியிலேயே தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்...
எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே நாம் திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு மக்களுடன் நேற்றைய தினம் (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு...
கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்துகொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், தலைமுடியை அவ்வாறு அலங்காரம் செய்துகொண்டிருப்பவர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும், அவ்வாறு சிகையலங்காரம் செய்துகொண்டு சுற்றித்திரிபவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
சாவகச்சேரி தபால் நிலையத்திலிருந்து தனக்கிளப்பு தபால் நிலையத்துக்கு நேற்று புதன்கிழமை (05) கொண்டு செல்லப்பட்ட போது பறித்துச்செல்லப்பட்ட தபால் பொதிகள் சிலவற்றை, தனக்கிளப்பு பகுதியிலிருந்து மீட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். தபால் ஊழியர்களால் கொண்டுசெல்லப்பட்ட இந்தப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் தபால் ஊழியர்களால் சாவகச்சேரி பொலிஸ்...
வல்வெட்டித்துறை விநாயகர் வித்தியாலயத்துக்கு அருகில், தேர்தல் விதிமுறையை மீறி கட்சி அலுவலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அல்லது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என தேர்தல் ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவுறுத்தலை மீறிய வகையில் மேற்படி கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 18பேர் விடுவிக்கப்படவுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார்
காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி செபமாலை அடிகளார் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழு, யாழ். மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, வடக்கு காணாமல் போனோரின் உறவுகளை தேடும் சங்கம் ஆகியன இணைந்து சர்வதேச மனித...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில், ஜனவரி 8ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமையானது தவறான தீர்மானமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளருடன் நேற்று புதன்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் தற்போது...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் என்று முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போராளிகளையும் கடந்த அரசு இந்தக் கொலைகளுக்காக பயன்படுத்திக்கொண்டது என்று அவர் கூறியுள்ளார். கடந்த அரசின் அரசியல்வாதிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய...
"தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....
எதிர்கால சவால்களை முறியடிப்பதற்காக, இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நான் பிராந்தியத் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், பிராந்திய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் அவர்கள் எவ்வாறு கரிசனை...
ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தது அவர் மீது கொண்ட காதலால் அல்ல, அது இராஜதந்திரம் எனத் தெரிவித்துள்ளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளரும் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன். யாழ்ப்பாணம் வரணிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது விடுதலைப்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சளருமான வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நிவுகிறது. இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்துக்கு பயிற்சி அளிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார் அப்போது வாசிம்...
Loading posts...
All posts loaded
No more posts
