Ad Widget

முக்கிய தேவைகளுக்கு மணலை பெறலாம்

யாழ்.மாவட்டத்தில் தற்போது மணல் அகழ்வதற்கு தடை விதிக்கப்பட்டமையால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், முக்கிய செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்காக மணல் தேவைப்படும் போது, அந்தந்த பிரதேச செயலாளர் ஊடாக தொடர்புகொண்டு மணலை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோதே இவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

யாழ். மாவட்டத்துக்கான மணல் தேவையை பூர்த்தி செய்யும் இடமாக மருதங்கேணி பிரதேசம் காணப்படுகின்றது. அங்கிருந்து கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக மணல் அகழப்பட்டமையால் ஏற்பட்ட சூழல் பாதிப்பு மற்றும் அப்பகுதி மக்களின் நலன்கருதி மணல் அகழ்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கட்டடப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நிலவியது.

முக்கியமான தேவைகளுக்கான மணல் வழங்கப்படவேண்டும். ஆகவே, முக்கிய தேவை கருதி செயற்றிட்டங்களை மேற்கொள்பவர்கள் தங்களின் மணல் தேவை குறித்து உரிய பிரதேச செயலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

உரிய பிரதேச செயலகங்களின் செயலர்கள், மருதங்கேணி பிரதேச செயலருடன் தொடர்புகொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றார்.

Related Posts