Ad Widget

சுயநிர்ணயம், சமஷ்டியை உள்ளடக்கி அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும்! – சித்தார்த்தன்

தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கக் கூடிய வகையில்- சுயநிர்ணயம் மற்றும் சமஷ்டியை உள்ளடக்கியதாக அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் இப்பொழுது இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிக் கதைக்கிறது. அந்த சீர்திருத்தத்தில் எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வையும் உள்ளடக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞா பனத்தில் சுயநிர்ணயம், சமஷ்டி மற்றும் திம்புக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் கூறியிருக்கின்றோம். அவற்றுக்கு அரசியலமைப்பு ரீதியாக, சட்டரீயான வடிவம்கொடுத்து அவற்றையும் உள்ளடக் கியதான அரசியலமைப்பு சீர்த்திருத்த மொன்றைக் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் நாம் சொல்லக்கூடிய சகல விடயங்களும் அதில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் ஒரு நியாயமான தீர்வு அவசியமாகவுள்ளது. ஏனெனில் மக்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்தது வறுமைக்கோட்டின் கீழ் பல ஆயிரக்கணக்கான எமது மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் நிச்சயம் அவசியம். ஆகவே ஒரு சரியான தீர்வின் மூலம் அதிகாரங்கள் பகிரப்படுவதன் மூலம் இந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அதுவே சரியான வழியாக இருக்கும்.

அதனை அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான சந்தர்ப்பத் தையும் நாங்கள் வழங்க வேண்டும். உடனடியாக அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத்துக்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்குவதாக எமது பாராளுமன்றக் குழுத் தலைவர் கூறியுள்ளார். இது சில வேளைகளில் பிழையாக அர்த்தப்படுத்தப்படுகிறது.நாம் புதிய அரசாங்கத்துடன் உறவுகளைப் பேணுவதாகவும், கண்மூடித் தனமாக அவர்களை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது.

விடயதானங்களைப் பொறுத்து நாம் அவர்களுக்கு ஆதரவுகளை வழங்கி வருகின்றோம். சிறிதுகாலம் அவர்களுக்குக் கொடுத்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் பாரிய மாற்றமொன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. சர்வதேசத்தில் உள்ள பல நாடுகள் இந்த அரசாங்கத்தை வரவேற்றிருப்பதுடன், ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளன. ஆகவே ஒரு தீர்வுநோக்கிய பயணத்தில் சர்வதேச நாடுகளுடன் எங்களுடைய அழுத்தங்களைக் கொடுத்து அவர்கள் மூலமாகவும் இந்தத் தீர்வு சம்பந்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம். இதனை நாம் தொடர்ந்தும் முன்னெடுப் போம் என்றார்.

Related Posts