Ad Widget

அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்க முயற்சிக்கிறோம்

சட்டவிரோத செயல்களற்ற அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.

யாழ். புனித மரியாள் வித்தியாலயத்தில், இடம்பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும். தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடக்கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏதும் இடம்பெற்று கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது. உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ‘பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களது நடத்தைகளில் செயற்பாடுகளில், மாற்றமோ சந்தேகமோ ஏற்பட்டால், உடனடியாக எமக்கு தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக 18 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் நடத்தைகள் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களது பெற்றோரும் உறவினர்களும், சகோதரர்களும் கவனமெடுக்க வேண்டும்’ என்றார்.

Related Posts