வடக்கு -கிழக்கு மக்கள் உதிரிக்கட்சிகளை அடியோடு உதறித்தள்ள வேண்டும்; த.தே.கூ தலைவர் வலியுறுத்து

வடக்கு -கிழக்கு மக்கள் உதிரிக் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து 20 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கும் நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணையுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான பரப்புரை கூட்டம் நேற்று முன்தினம் மருதனார்மடத்தில் நடைபெற்றது. அதில்...

ஜனநாயக ரீதியில் மீள்பிரவேசிப்போம் – ஜனநாயக போராளிகள்

'தமிழ் மக்களின் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம் செய்துள்ளோம். எம்மை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் நம்புகின்றோம்' என யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்தது. யாழ்....
Ad Widget

நாட்டுக்கு நான் செய்த குற்றம்தான் என்ன? – மக்களிடம் கேட்கிறார் மஹிந்த

நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்டதா அல்லது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டு சென்றதா நான் செய்த குற்றம்? - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ அம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

கிளிநொச்சியில் 3 வயது சிறுமி பாலியல் வன்புணர்வின் பின்னரே கொல்லப்பட்டார்!

காணாமல் போய் பின் 28 நாட்களின் பின்னர் உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்ட 3 வயதான ஜெர்சிகா பாலியல் வன்புணர்வுக்குப் பின்னரே கொல்லப்பட்டார் என கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் ஜெர்சிகா என்ற இச்சிறுமி கடந்த ஜூன் 21 ஆம் திகதி நீர் நீர் வாய்க்காலுக்குக் குளிப்பதற்காக...

விடுதலைப் புலிகள் ஆயுதத்தால் கோரிய விடயங்களை த.தே.கூ. அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது! – ஐ.ம.சு.மு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களானவை இன நல்லுறவுக்கும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- கொடிய...

யாழ். முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்!

வட இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியான நிலையில் இருப்பதனால், அதனை முழுமைப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதேநேரம், வடமாகாண சபை தேர்தலின் ஊடாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து அவர்கள்...

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற பஸ் மீது கல்வீச்சு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸின் மீது வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு சாலைக்கு சொந்தமான பஸ்ஸின் மீதே நேற்று இரவு 9 மணியளவில் கல்வீசப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில்...

மருதனார்மடத்தில் பிரபாகரனுக்கு வானைப் பிளந்த கரகோஷம்! – ஆச்சரியத்துடன் பார்த்த கண்காணிப்பாளர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று மருதனார்மடத்தில் நடத்திய கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம், கூட்டத்தினர் பெரும் கரகோஷம் செய்து வரவேற்றனர். கூட்டமைப்பின் வேட்பாளர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் தவிசாளர் பிரகாஸ் ஆகியோர் உரையாற்றும் போது, எங்களின் போராட்டம் ஆயுத வழியில் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு தற்போது அது...

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பணிகள் தொடர்பில் இராணுவம் விளக்கம்

இலங்கை பாதுகாப்பு படை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சில பணிகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது. வடக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுதல், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்தல் மற்றும் மக்களை மீள்குடியேற்றுதல் போன்ற பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது. இலங்கை பாதுகாப்புப் படையினரின் வடக்கு...

ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும்!

இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தைப் பகுதியில் சனிக்கிழயன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சி,...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை யாழ்.நகரப் பகுதியில் நடைபெற்றது.மாணவ சமூகத்தினருக்கான பிரச்சார கூட்டமே நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மணவர்கள் பலர் அரசியல் சம்மந்தமானதும், சட்டம் சம்மந்தமான கேள்விகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டிருந்தனர்.மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மருதனார்மடம் சந்தைக் கடைத் தொகுதி திறந்துவைப்பு!

சுமார் ஐந்து கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருதனார்மடம் சந்தை கடைத்தொகுதி திறப்பு விழா இன்று சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது. மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஆலயத்தில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இதையடுத்து கடைத் தொகுதியை வலி.தெற்கு பிரதேச...

பசுமாடுகள் உயிரிழக்க காரணமாக பேருந்து சாரதி பணியில் இருந்து இடைநிறுத்தம்

பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டி பகுதியில் எட்டு பசுமாடுகளை மோதி விபத்தினை ஏற்படுத்தி, அப் பசுமாடுகளின் உரிமையாளருக்கு வாழ்வாதரத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய பருத்தித்துறை போக்குவரத்து சாலையின் சாரதியை பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக கோண்டாவில் சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 13ம் திகதி, யாழ்ப்பாணத்தில் இருந்து, பருத்தித்துறை நோக்கி வந்த பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பேருந்து, வேகக்கட்டுப்பாட்டை...

த.தே.ம முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை முடக்குவதற்கு அரசாங்கம் சதி

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் தேர்தல் பரப்புரைகளை அரசாங்கம் திட்டமிட்டு முடக்கி வருகின்றது என்று அக் கட்சியின் ஊடகப் போச்சாளரும் வேட்பாளருமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டும், தடுத்து வைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்விடயம்...

தமிழர்கள் அனைவரும் திரண்டு வாக்களித்தாலே வெற்றி நிச்சயம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்தாலே போதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விடும். அதன் மூலம் நம்மைக் காட்டிக் கொடுத்து சுகம் கண்ட எட்டப்பர் கூட்டத்தை யாழ்.மண்ணிலிருந்தே விரட்டியடிக்க முடியும் என்று யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் தொல்புரம் மேற்கு,துணைவி,சுழிபுரம்,பொன்னாலை...

பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்ற செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப்போரில் கொல்லப்படவில்லை எனவும், அவர் உயிருடன் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...

மற்றுமொரு வெள்ளைவான் சம்பவத்தால் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை!

மிரிஹான வெள்ளைவான் சம்பவமானது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு வெள்ளைவான் சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் களத்தைப் பெரும் பரபரப்பாக்கியுள்ளது. இராணுவ இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வாகனமொன்றிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் வீரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிறிதொரு இலக்கத்...

தபால் மூலம் வாக்களிப்பதற்கான 62,102 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628,925 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 566,823 பேர் தகுதிபெற் றுள்ளனரென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அந்தவகையில் அதில் 62,102 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான...

தமிழ்- முஸ்லிம் உறவுகளைப் பலப்படுத்த வேண்டும்! – மூதூர் முஸ்லிம்களுடனான சந்திப்பில் சம்பந்தன்

தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அதற் காக நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு உதவ காத்திருக்கிறோம் என்று தமிழ் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூதூர் முஸ்லிம் பிரமுகர்கள் மற்றும் மக்களுக்னும் சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று அவரின் இல்லத்தில் கடந்த வியாழன் மாலை நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நூற்றுக்...

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சி என்பதே கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் – சித்தார்த்தன்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞானபம் அமையப் பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கூட்டமைப்பின் தேர்தல்...
Loading posts...

All posts loaded

No more posts