எம்.பிக்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மேலும் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மேலும் அதிகரிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். இருப்பினும், இந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு தொகையால் அதிகரிக்கப்படவுள்ளது என்பதைக் குறிப்பிடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்தம் 50 இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிக்கு வந்த அரசு சமர்ப்பித்த...

புதிய ஆட்சியில் நீதியை நிலைநாட்டுக! – சபையில் சம்பந்தன் வலியுறுத்து!

"புதிய அரசின் ஆட்சியில் நாட்டில் ஜனநயாகம், சமத்துவம், நீதி என்பன நிலைநாட்டப்படவேண்டும். இந்த இலக்கை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை சபாநாயகருக்கு வழங்கும்'' என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தலைமையில் கூடியது. இதையடுத்து...
Ad Widget

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் வழக்கு முடிவுக்கு வந்தது

வடமாகாணக்கல்வி அமைச்சினால் யாழ் இந்து ஆரம்பபாடசாலை அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது எனினும் தற்போது அதிபராக கடமையாற்றும் திரு.நா. மகேந்திரராஜா அண்மைய வருடங்களிலேயே அதிராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கல்வி அமைச்சினால் அந்நியமனம் தவறானது என கருதி மீளவும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இவ்விளம்பரத்தினை ஆட்சேபித்து இந்து ஆரம்பபாடசாலை...

20வது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு கோருகின்றார் ஜனாதிபதி

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமானபோது விஷேட உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கியம்...

த.தே. கூ.வின் பாராளுமன்றக்குழு நிர்வாகம் தெரிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்ட்டுள்ளதோடு கூட்டமைப்பின் கொறடாவாக த. சித்தார்த்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குழுக்களின் செயலாளராக சிறிதரனும் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனுக்கு வழங்கப்படவேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்...

வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரின், இரத்த மாதிரிகளை தனியார் இராசாயண பகுப்பாய்வு நிறுவனதிற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 14ம் திகதி புங்குடுதீவு...

சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் – விக்னேஸ்வரன் பிரேரணை

இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை காலை முன்னெடுத்திருந்தார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை...

நெடுந்தீவுக் கடற்பரப்பில் 16 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் வந்த 3 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாயக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அங்கிருந்து...

யாழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் வழக்க ஏற்பாடு

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலமைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்க யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இதனடிப்படையில் யாழ்...

பிரதி சபாநாயகர் திலங்க, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம்!

8வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த பாராளுமன்றில் ஈபிடிபி கட்சி எம்பியான சந்திரகுமாருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது திலங்க சுமதிபாலவின் பெயரை ரவுப் ஹக்கீமும் செல்வம்...

வடமாகாண சபையில் சிவாஜி தனித்து போராட்டம்

இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை...

அகதிகளின் குறைகள் தீர்க்க புதிய இணையத்தளம்

இலங்கை உள்ளிட்ட ஆசிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்குவதற்கும், நிதியுதவி பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வதற்கும் ஒரு புதிய இணையத்தளத்தை ஜேர்மனியை சேர்ந்த தம்பதிகள் உருவாக்கியுள்ளனர். பெர்லின் நகரை சேர்ந்த மரெய்கே கெய்லிங் (28) மற்றும் ஜோனஸ் ககோஸ்கே (31) என்ற தம்பதியினர், அகதிகளுக்கு பலன் ஏற்படும் வகையில் http://www.refugees-welcome.net/...

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய அவர்கள் தெரிவு!

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார் கரு ஜயசூரியவின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்ததுடன், அவரது பெயரை நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்துள்ளார். இதற்கமைய பிரதமர் மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் புதிய சபாநாயகரை பாராளுமன்ற...

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதழ்களைப் பெற விசேட ஏற்பாடு

யாழ். மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதழ்களை யாழ் மாவட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2014ஆம் ஆண்டு வரையிலான மாவட்டத்தின் சகல பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுகள் கணனி மயமாக்கப்பட்டுள்ளதுடன் எல்.ஜி.என் வலையமைப்பிலும் கொண்டுவரப்பட்டுள்ளது....

புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்யவில்லை! – பொன்சேகா

மோட்டார் கண்டு தாக்கியதாலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்திருக்கலாம். அவர் தற்கொலை செய்யவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தற்கொலை செய்யவில்லை. ஏனெனில் அவரின் தலையில்...

கஞ்சாவுடன் இருவர் கைது

இளவாளை பகுதியில் 50 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக இளவாளை பொலிஸ் பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வா தெரிவித்தார். வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்கள் வேன் ஒன்றில் குறித்த கஞ்சாவினை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஞ்சுள டி சில்வா குறிப்பிட்டார்....

சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளது: விரைவில் அறிக்கை

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ,...

காரைநகர் வேணன் அணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

காரைநகரின் பிரசித்திபெற்ற வேணன் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (31.08.2015) சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி வைத்துள்ளார். காரைநகர் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவுகின்ற ஒரு பிரதேசம். இதனால், மழைநீரை வீணாகக் கடலினுள் கலக்கவிடாது தேக்கி நிலத்தடிநீரை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வேணன் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள்...

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில்போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

இலங்கையின் இறுதிப்போரில் அடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகைளையும் பொதுஜன அமைப்புக்களையும் மக்களையும் இணந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நாளை(2) முக்கிய கூட்டம் ஒன்றை அனைத்து தரப்பினருடனும் ஏற்பாடு செய்துள்ளனர்...

விஷம் தெளிக்கப்பட்ட பழங்கள் இப்பொழுது சந்தையில்!!

நெல்லியடி நச்தைப் பதகுதியில் இயங்கும் பழக்கடைகளில் மருந்து விசிறப்பட்ட பழ வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லியடிப் பொதுச்சந்தையில் 10 மேற்ப்பட்டடோர் பழ வியாபாரம் செய்து வருகின்றர். தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் தமது விற்பனையை அதிகரிக்கு நோக்கில் மருந்து விசிறி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். மருந்து விசிறப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts