- Wednesday
- September 24th, 2025

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயக்குமாரியை மீண்டும் பொலிஸார் கைது செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட இவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது. முன்னரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நீதிமன்றின் ஊடாக விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன. ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி நேற்று இரவு (02) சோமாவதி தூபியின் முன்னால் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. கப்றுக் பூஜை மற்றும் கிரி ஆஹார பூஜை என்பன இன்றுகாலை நடைபெறுகின்றன....

இலங்கையில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 4 ஆண்டு காலத்தில் நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2012 ஆம்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை யான ஏழு நாட்களும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் வீடுகள் மற்றும் சுற்றுச் சூழலை சோதனையிட வரும் அதிகாரிகள் குழுவினருக்கு பூரண ஒத்து ழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர்...

சர்வதேச விசாரணை கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ,நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சிவிகே.சிவஞானம் தெரிவித்தார். தமிழர்கள் மீதாக இன அழிப்பு தொடர்பில் ஐ.நா சபை விசாரணை வலியுறுத்தி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை உறுப்பினர்கள், அமைச்சர்கள் உறுதிப்படுத்திய பின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கையோப்பத்துடன் ஐ.நா.சபை அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து...

நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையென தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளினில் ஈடுபடவேண்டாமென தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையிடம் சுரேஸ்பிறேமச்சந்திரன் கோரியுள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையெனவும் இனி சர்வதேச விசாரணை பற்றி கதைக்க வேண்டியதில்லையெனவும் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்டு மக்களினை குழப்பும் நடவடிக்கையாகும். அதே கருத்தினை தான் கட்சி தலைவரான சம்பந்தனும்...

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையினை வலியுறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் சம்பந்தமாக வெகுஜன அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் பல்கலைக்கழக சமூகம் ,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் திருநெல்வேலியில் இன்று (2) மாலை இடம்பெற்றது. கலந்துகொண்டவர்களிடமிருந்து பெறப்பட்ட...

பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால், தனக்கு வழங்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதித் தலைவர் என்ற கௌரவப் பதவியை தூக்கி எறியப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற குழுக்களின்...

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதவியேற்றிருப்பதன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முன்வந்திருப்பதை வரவேற்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அர்த்தமற்ற பகைமையுணர்வை கொட்டித் தீர்ப்பதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு...

இலங்கை நாடாளுமன்றத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி 8வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் நாளை 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும்...

தற்போது மக்களுடைய கைகளில் பணம் அளவுக்கதிகமாக புழங்குவதன் காரணமாக ஆன்மீகத்திலிருந்து தூர விலகி லௌகீக வாழ்க்கை வாழும் காலம் வந்து விட்டது என்று ,வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தெரிவித்துள்ளார். இன்று 23ஆவது நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், துன்பம்...

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மூன்றாவது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் மாணவர்களின் போராட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லை. எதிர்வரும் நாட்களில் தமக்கான நீதி கிடைக்கா விட்டால் வீதி மறியல் போராட்டம் செய்யப் போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மாணவர்களின் போராட்டம்...

யாழ்.நகரத்தில் இருக்கும் விளம்பர சேவைப் பிரிவு மாநகர சபையில் உரிய அனுமதிகளைப் பெறாது பழைய அனுமதியுடன் அடாத்தாக நடத்தப்பட்டு வருவதாக உறுப்பினர் ஆ.பரஞ்சோதி குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். மகேஸ்வரி நிதியத்தால் யாழ்.மாநகர சபையிலிருந்து அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்த விளம்பர சேவை, தற்போது வேறு ஒருவருக்கு...

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக, விமான நிலைய சேவையாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நெல் மூட்டைகளுடன் முதலாவது லொறி, மத்தல விமான நிலையத்தை...

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்தொடர்பாக சர்வதேசவிசாரணை தேவை எனக்கூறி கையெழுத்துப் போராட்டம் நேற்றயதினம் புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது. இதனை கூட்டமைப்பின் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்சிவசக்திஆனந்தன் கையொப்பமிட்டு ஆரம்பித்துவைத்தார். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா, முத்தையாமண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கு...

இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அவசியம் இல்லையெனவும், அதற்காக நேரம் ஒதுக்குவது வீணானது எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாதாந்த அமர்பில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடர்பில் முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா கருத்துத் தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில்...

வடமாகாண சபையில் உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகளை நிர்ணயித்து விட்டு, அந்த விதிகளை மீறுவது எவ்வகையில் நியாயமாகும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் கேள்வி எழுப்பினார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாதாந்த அமர்வின் போதே அஸ்மின் இந்தக் கேள்வியை எழுப்பினார். 'ஒரு அமர்வில் 15 கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது எனவும்,...

புலனாய்வாளர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தி வீடுகளுக்குள் நுழைந்து விவரங்களை சேகரிக்கும் நவடிக்கையில் ஈடுபடுவோரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொக்குவிலில் செவ்வாய்க்கிழமை சில வீடுகளுக்கு சென்ற கொச்சைத் தமிழ் பேசும் மூவர் தாம் சி.ஐ.டியினர் என்றும், விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரைத் தாம் கைது செய்துள்ளனர் என்றும், அவர்கள் தொடர்பான விவரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளனர். சிலர் அவர்கள் சி.ஐ.டியினர்தான்...

பெண்ணொருவரைக் கொலை செய்த வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட இருவரும் நிரபராதிகள் என யாழ்.மேல் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை (01) விடுதலை செய்தது. கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் தவீந்திரராஸ் கலைச்செல்வி என்பவரை கொலை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரன் தவீந்திரராஸ்...

All posts loaded
No more posts