Ad Widget

நெடுந்தீவில் குடிநீருக்காக தேவையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை

நெடுந்தீவைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாண கிளை மற்றும் UTE ஆகியன இணைந்து நீர் வழங்கல் மற்றும் இரு புதிய கடல் நீர் சுத்திகரிக்கும் (Reverse Osmosis) நிலையங்களை நிறுவ முன்வந்துள்ளன.

நெடுந்தீவுப் பகுதியில் தூய்மையான குடிநீருக்காக காணப்படும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு, 56 மில்லியன் ரூபாய் பெறுமதியான (Reverse Osmosis) நீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையங்கள், நாளொன்றுக்கு 100 கன மீற்றர் உப்பு நீரை தூய்மையாக்கி குடிநீராக மாற்றும் திறனை கொண்டுள்ளன.

இலங்கையில் காணப்படும் மிகவும் பின்தங்கிய கைவிடப்பட்ட ஒரு தீவாக நெடுந்தீவு காணப்படுகிறது. கடுமையான அலைகள் காணப்படும் கடல் பகுதியினூடாக இந்த தீவுக்கு பயணிக்க வேண்டியுள்ளதால், பலர் இந்த தீவுக்கு செல்வதை பெருமளவு விரும்புவதில்லை.

ஆனாலும், இந்தத் தீவுக்கு அருகாமையில் காணப்படும் நயினாதீவுக்கு தினசரி பெருமளவானோர் விஜயம் செய்கின்றனர். இந்த தீவில் காணப்படும் ஒரே தூய குடி நீர் மூலமாக, “ஆழமறியாத கிணறு” (“Devil’s Well”) அமைந்துள்ளது.

UTE இன் சூழல்சார் செயற்பாடுகளில் ஈடுபடும் பொறியியல் பிரிவான இகொலொஜிக் சிஸ்டம்ஸ் (பிரைவட்) லிமிட்டெட், யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயற்படுகிறது. மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய சூழல்சார் தீர்வுகளை வழங்கும் முன்னோடி நிறுவனமாக இகொலொஜிக் திகழ்கிறது.

வடிவமைப்பு மற்றும் கட்டியமைத்துக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளுக்கான பொறியியல் தீர்வுகளை வழங்கும் இரு தசாப்த காலப்பகுதிக்கு அதிகமான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள இகொலொஜிக், அரச, விருந்தோம்பல், ஆடைத்தொழிற்துறை, இறப்பர், பொதியிடல், அச்சிடல், உரம் மற்றும் துறைசார் இரசாயனப் பொருட்கள், உணவு மற்றும் பான வகைகள் மற்றும் நிர்மாணம் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பல வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் சேவைகள் என்பது, உருவாக்கம் மற்றும் கட்டுருவாக்கம் என்பது மட்டுமல்லாமல், நிறுவுதல், பரிசோதித்தல் மற்றும் செயற்படுத்தல் மற்றும் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்றவற்றுடன், வாடிக்கையாளர்களுக்கு சட்டவிதிமுறைகளுக்கமைய அவசியமான அனுமதிகளை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றையும் மேற்கொண்டு வருகிறது.

மேலதிக சேவையாக, இகொலொஜிக்கினால் விநியோகிக்கப்படும் அமைப்புகள் 24 மணி நேர அவசர பராமரிப்பு சேவைகளை எவ்வித மேலதிக கட்டணங்களுமின்றி பெற்றுக் கொள்ளும். ஏனைய நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் அமைப்புகளுக்கும் இந்த சேவை நீடிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட சூழல் நியமங்களை எய்துவது மற்றும் வளப்பாவனையை குறைப்பது மற்றும் உயர் தர சேவைகளை பேணுவது போன்றவற்றை முன்னெடுக்கின்றமைக்காக இகொலொஜிக் பெருமை கொள்கிறது. இகொலொஜிக் சிஸ்டம்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் மீது நம்பிக்கையை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், தமது கழிவுகள் சூழலுக்கு மிகவும் குறைந்த பாதிப்புடன் சிக்கனமான முறையில் கையாளப்படுவதை அறிவார்கள்.

இந்த திட்டத்துக்கான கடல்நீர் சுத்திகரிக்கும் (Reverse Osmosis) அலகுகள், ஹிடாச்சி அக்குவாடிக் என்ஜினியரிங் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரை தளமாக கொண்டியங்கும் ஹிடாச்சி அக்குவாடிக் என்ஜினியரிங் நிறுவனத்துடன் UTE கைகோர்த்து இந்த திட்டத்தை இலத்திரனியல் மற்றும் பொறியியல் உடன்படிக்கைகளுக்கமைய முன்னெடுக்கிறது. இதில் நிறுவல், பரிசோதித்தல், செயற்படுத்தல் மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் விற்பனைக்கு பிந்திய பெருமளவான சேவைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

Related Posts