மிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி பதாகை ஒன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏக மனதாக நிறைவேறியுள்ளது.
எனவே இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வட கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த பதாகையை, வடமாகாண சபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி ஆகியோர் யாழ் நகரில் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
