இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை போர்க்குற்றவியல் அறிக்கை அல்லவென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மேலும் அறிக்கையினை வரவேற்பதோடு கலப்பு நீதிமன்றம் தொடர்பில் முழுமையான தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும் என்றார்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பாக அவர் கருத்து வெளியிட்டார்.