- Wednesday
- September 24th, 2025

குத்தகை நிறுவனங்கள் மற்றும் தவணைக கட்டண அடிப்படையில் பொருட்களை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணங்களை வசூலிப்பதற்காக மாலை 5 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்கள், மாலை 5 மணிக்கு பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிதி சேகரிப்பதை தடை செய்யவேண்டும்...

வடமராட்சி வதிரிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த 4 பேரையும் 4 மணித்தியாலங்கள் நீதிமன்ற வளாகத்தைத் துப்பரவு செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, நேற்று வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்தார். இந்த 4 பேரும் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சென்று மாணவிகளுடன் சேஷ்டை புரிந்து வருவதாக பருத்தித்துறை...

ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது...

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை தொடர்பிலான விசாரணைக்கு குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி என்பவரை கையளிக்குமாறு இந்தியா கோருமாயின் அவரை கையளிப்பதற்கு இலங்கை தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிடமுடியாது'' - என்று விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தெரிவித்துள்ளார். பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி தோண்டித் தேடுவதை விடவும், அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்....

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அவுஸ்திரேலிய கடற்படையின் மெல்பர்ன் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் சாகர மற்றும் சமுத்ர கப்பல்கள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரேத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் பிராந்திய கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து பயனுள்ள மற்றும் திறமையான பங்களிப்பை செய்கின்றது....

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை பகல் 02.00 மணியளவில் புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் வடக்கு - புத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கஜிபன் (வயது 21) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். புங்கங்குளம் புகையிரத...

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று வலிகாம வலயக் கல்விப் பணிப் பாளர் சந்திரராஜா தெரிவித்தார். குறித்த பாடசாலையிலிருந்து இட மாற்றம் செய்யப்பட்ட அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நிய மிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலைமையை அடுத்தே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று புதன்கிழமை (02.09.2015) ஆரம்பமாகியுள்ளது.நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்துள்ளார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற விவசாயச்...

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார். அவ்வாறிருக்கும் போது இந்த நியமனம் செல்லுபடியாகுமா என்றும் அவர் கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர்...

இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் பற்றிய சில தகவல்கள், 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் பிறந்தார். சம்பந்தன் கல்ஓயா திட்டத்தின் களஞ்சிய...

தேசிய நலன் என்று அரசாங்கம் கொண்டுவரும் தவறான சட்டத் திட்டங்களை எதிர்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீது உரையாற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார். நாட்டு...

8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார்.

மனித உரிமை சட்ட மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துவதாக, தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் தலைவர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை யாழ். கந்தர்மடம் - மணற்றரை ஒழுங்கையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முண்னணியின்...

8 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 01ம் திகதி புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடம் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடிய போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தனை அறிவித்தார்....

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள்....

2016 ஜனவரி மாதம் முதல் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டைகளின் தொடர் இலக்கங்களை பதிவு செய்யும் போது 9 இலக்கங்களுக்கு பதிலாக 12 இலக்கங்களை பதிவு செய்வதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன் அடையாள அட்டையின் தொடர் இலக்கங்களின் இறுதியில் பதியப்படும் V குறியீட்டையும் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக...

"நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு இடம்பெறவுள்ள எனது பயணம் வேகமான பயணம் அல்ல. இது மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நாட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கட்சியை முழுமையாக மறுசீரமைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாடு...

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டார். சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அதிபருக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரியிருந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேக நபர் அங்கு கல்வி...

யாழ் மாநகர சபை ஆணையாளராக பொன்னம்பலம் வாகீசன், உள்ளூராட்சி அமைச்சின் உள்ளூராட்சி ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரைகாலமும் கூட்டுறவு ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றியுள்ளார். இதுவரைகாலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக கடமையாற்றிய செ.பிரணவநாதன், வடமாகாண மேலதிக கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை (02) அமுலுக்கு வரும் வகையில் இம் மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

All posts loaded
No more posts