- Friday
- July 31st, 2026
உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் சம்பந்தன் சென்றது எவ்வாறு என இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தை நேரில் பார்வையிட்டார். இராணுவக் குடியிருப்பு அமைந்துள்ள அந்தப் பகுதிக்குள் நுழைந்த அவரின் வாகனம் சாதரணமாக உள்ளே செல்ல...
வழக்குக்காக நீதிமன்றம் சென்றுவிட்டு தாயாரோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை வானில் வந்த இனந்தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை மதியம் வடமராட்சி - வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது: இதில் இதே இடத்தைச் சேர்ந்த 32 வயதான பெண்...
மனைவியைக் கொலையற்ற மரணம் செய்த கணவனுக்கு 16 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27 ஆம் திகதி கைதடி கிழக்கில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணவரை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு...
வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலும், புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அன்மையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் சிறு பான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை...
வடமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தரிசனம் நிறுவனத்தின் 2..5 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (13.10.2015) திறந்து வைத்துள்ளார். இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது....
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 7.00 மணி இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை) தமிழ்த்...
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆரம்பகால அமைதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த இந்தியா, போரின் இறுதித் தருணங்களில் இலங்கை இராணுவம் வெற்றியடையும் வாய்ப்பு அதிகரித்தவுடன் விடுதலைப்புலிகளின் அழிவை எதிர்பார்த்துகாத்திருந்ததாக தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்யஹய்ம், புலிகளுக்காக இந்திய அரசு ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்த வில்லை எனக் குறிப்பிட்டார். தென்னிந்தி...
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலை முகாமையாளரின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக இன்று யாழ்.பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமையகத்தால் மூன்று கட்டமான விசாரணைகள் இடம்பெற்றபோதிலும் எந்த விதத்திலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிர்வாகக் குழுவின் அனுமதியைப் பெறாமல் சுயமாக முடிவுகள் எடுத்தல்,ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஒழுங்கீனம்,மதுப்பாவனையுடன் வேலைக்கு...
நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி அதனுடன் இணைந்து, மற்றுமொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. சமவுரிமை இயக்கம் என்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை கடற்ப்பரப்பில் வைத்து 9 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இழுவைப்படகு ஒன்றில் பருத்தித்துறை கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்...
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவிகளை மறைமுகமாக பாடசாலைப் பணியாளர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து வருவதாகவும் இதனால் மாணவிகள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகின்றது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில்; உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பிரிவுகளில் கல்வி...
யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்க மறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். இந்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகள் நீதிபதி இளஞ்செழியன், முன்னிலையில் விசாரணைக்கு...
தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் நண்பகலளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளது. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
வடமாகாணத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.எவ்.யூ.பெர்னாண்டோ இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணிக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது. வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் எ.ஜயசிங்க இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் காலப்பகுதியில் ஊர்காவற்றுறைப் பகுதிக்கு பிரசார நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பினர் சென்றபோது ஈ.பி.டி.பி. உறுப்பினர்களினால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.சசி மகேஸ்வரன் முன்னிலையில் இடம் பெற்றது. இந்த...
நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது...
நேசத்தமிழ் உறவுகளே! உங்களின் விடிவிற்காய் உதிரம் சிந்தி ஊருக்காய் உழைத்த நாம் இன்று உறவுகளை பிரிந்து உற்றவரை பிரிந்து பூட்டிய சிறைகளுக்குள் பட்டினி போராட்டம் நடத்துகிறோம். உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அவல குரல் கேட்கிறதா சொல்லுங்கள். ஒரு மனித வாழ்க்கையின் சத்தான அரைவாசி காலத்தை சிறையில் தொலைத்து ஏக்கங்கள், தாக்கங்கள், நிராகரிப்புகள், நிராசைகள், அவமானங்கள், அருவப்புக்கள்...
யாழ். மறை மாவட்டத்தின் 8 ஆவது ஆயராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று வத்திக்கானில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து இந்த அறிவிப்பை இளைப்பாறிச் செல்லும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தனது குருத்துவ வாழ்வில் 25...
Loading posts...
All posts loaded
No more posts
