இன்று யாழில் ஆர்ப்பாட்டம்?

சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை யாழ். நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அ. பரம்சோதி தெரிவித்தார். சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார். குறித்த ஆர்ப்பாட்டத்தினை...

தந்தையின் கத்திக் வெட்டுக்கு இலக்காகிய மகன் வைத்தியசாலையில்

அச்சுவேலி தோப்புப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை தந்தையின் கத்திக் வெட்டுக்கு இலக்காகிய மகன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த ஜெயபரன் செந்தூரன் (வயது 24) என்பவரே கழுத்தில் வெட்டுக்காயம் பட்டு படுகாயமடைந்தார். தந்தைக்கும் தாய்க்கும் இடையில் சண்டை இடம்பெற்ற வேளையில் அதனை தடுப்பதற்கு மகன்...
Ad Widget

இரண்டாவது நாளாகவும் தொடரும் நடைபயணம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் நடை பயணம் இன்று வெள்ளிக்கிழமை இடண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. கிளிநொச்சியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான இரண்டாம் நாள் பயணத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் மக்கள் உள்நாட்டு விசாரணை விரும்பவில்லை, சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தும்...

Yarl Geek Challenge – 4

சிறந்த கணினித் தொடர்பாடல் திறமைகள், படைப்பாற்றலினுடாக புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கும் இளம் தொழில்நுட்பவல்லுநர்களை அடையாளங்காணும் போட்டி நிகழ்ச்சியான Yarl Geek Challenge இன் நான்காவது பருவத்தின் அறிமுகமும் ஆரம்பமும், எதிர்வரும் சனிக்கிழமை (12) மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில்...

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்பட்ட நாட்டை பிளவுபடுத்த இடமளியேன்!

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இராணுவ வீரர்கள் பாரிய அர்ப்பணிப்பு, அறிவு, அனுபவம், தெளிவு போன்றவற்றை அன்று வழங்கியிருக்காவிட்டால் நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும் என அவர் கூறினார். அந்த பாரிய அர்ப்பணிப்பை மறப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். நமக்காக...

அரசியல் கைதிகளின் உரிமை மீறல்: உடன் விடுதலை செய்க!

பல வருட காலமாக வழக்கு எதுவும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபே மற்றும் இலங்கை மனித...

வடக்கின் தேவைகளை ஆராய சந்திரிகா தலைமையில் குழு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைகள் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களுக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை...

சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க முடியாது! – 55 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர். இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக...

உறவுகளைப் பார்க்கச் செல்லும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கேட்கும் சிறை அதிகாரிகள்!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறவுகளை பார்வையிடச் செல்லும் பெண்களிடம் சிறை அதிகாரிகளினால் பாலியல் இலஞ்சம் கேட்கப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறைக்கைதியொருவரின் மனைவி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தான் தனது கணவரைப் பார்வையிடச் செல்லும்...

சுயநிர்ணயம், சமஷ்டியை உள்ளடக்கி அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும்! – சித்தார்த்தன்

தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கக் கூடிய வகையில்- சுயநிர்ணயம் மற்றும் சமஷ்டியை உள்ளடக்கியதாக அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் இப்பொழுது இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிக் கதைக்கிறது. அந்த சீர்திருத்தத்தில் எமது...

முக்கிய தேவைகளுக்கு மணலை பெறலாம்

யாழ்.மாவட்டத்தில் தற்போது மணல் அகழ்வதற்கு தடை விதிக்கப்பட்டமையால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், முக்கிய செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்காக மணல் தேவைப்படும் போது, அந்தந்த பிரதேச செயலாளர் ஊடாக தொடர்புகொண்டு மணலை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று...

தெல்லிப்பழையில் முறையற்ற கர்ப்பம் அதிகரிப்பதாக புகார்

தெல்லிப்பழை பிரதேசத்தில் முறையற்ற கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பன இடம்பெற்றன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரையில் 30 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோது இவர் இவ்வாறு...

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட நிதி கிடைக்காது!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (10) ஆரம்பமான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்கான சேவையை அலட்சியம் செய்வோருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி அவசியமில்லை என குறிப்பிட்ட பிரதமர் தமது பிரதேசத்தில்...

சமூர்த்தி பயனாளிகளுக்கான வீட்டுக் கடனுதவி

சமூர்த்தி நிவாரணம் பெற்ற பயனாளிகளில் 80 பயனாளிகளுக்கான வீட்டு கடன் உதவி இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது. சமூர்த்தி பயனாளிகளுக்கான காசோலைகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வழங்கி வைத்தார். 2014...

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் நோக்கி நடைபயணம் ஆரம்பம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி நடை பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. மனித உரிமை மீறல்களுக்கு உள்ளக பொறிமுறை பொருத்தமற்றது என்பதை சட்டிக்காட்டியும் சர்வதேச விசாரணையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும் வட மாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம்...

யாழ். மாவட்டத்தில் குடிநீர் போத்தல்களில் கலப்படங்கள் – வழக்குத் தாக்கல் செய்ய முடிவு

யாழ். மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பாவணையாளர் அலுவல்கள் அதிகார அதிகாரி தனசேகரன் வசந்த சேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு குழு...

‘இலங்கை: நீதிக்கான தேடல்’ புதிய ஆவணப்படத்தால் இலங்கைக்கு தலையிடி!

இலங்கையின் போர்க்குற்றங்களை, சனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் இந்த அரை மணிநேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில்...

மன்னார் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற கையெழுத்து வேட்டையில் வடமாகாணசபை அமைச்சரும் இணைந்தார்!.

யாழில் கடந்த 75 நாட்களில் வீதி விபத்துக்களில் 48 பேர் மரணம்!!

யாழ். மாவட்­டத்தில் வீதி விபத்­துக்­க­ளினால் 75 தினங்­களில் 48 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­துடன் 4ஆயி­ரத்து 850 பேருக்கு எலும்பு முறிவும் 700 பேருக்கு தலையில் பாதிப்பும் ஏற்பட்டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கின்­றது. யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் புள்ளி விப­ரங்­களின் பிர­காரம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திக­தியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஏற்­பட்ட விப­த்­துக்கள்...

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­களின் நல்­வாழ்­வுக்கும் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுப்பேன் – விஜ­ய­கலா

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பல்­லா­யி­ரக் ­க­ணக்­கான சிறு­வர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு எனக்கு புதிய அமைச்சின் மூலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.எனவே இந்­தப்­ப­ணி­யினை உரிய வகையில் நான் மேற்­கொள்­வ­துடன் தேசிய ரீதி­யிலும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்பேன் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார். இராஜாங்க அமைச்சராக அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர்...
Loading posts...

All posts loaded

No more posts