Ad Widget

யாழில் இடம்பெற்ற தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோராங்களை பாதுகாத்தல் சம்பந்தமான விழப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீநிஹால் உட்பட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, உறுப்பினர் பா.கஜதீபன்,

வட மாகாண ஆளுனரின் செயாளர் எல.இளங்கோவன் மற்றும் யாழ் மாவமட்ட திணைக்களங்களின் தலைவர்கள், யாழ் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், இராணுவ பொலிஸ் கடற்படைகளின் அதிகாரிகள் சர்வமதத் தலைவர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.

கோட்டைப் பகுதியைச் சுற்றிக் காணப்படும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் உட்பட தேவையற்ற முறையில் கடலிலும் கரையிலும் வீசப்பட்டு இருந்த பொருட்கள் அகற்றப்பட்டதுடன், தொடர்ந்தும் இந் நடவடிக்கையை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

sea_area_cleannig_001

sea_area_cleannig_004

sea_area_cleannig_010

Related Posts