- Friday
- November 21st, 2025
யாழில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாளை (இன்று) மனு ஒன்றை கையளிக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என மேற்கொள்ளப்படுகின்ற நடைபவணியின் நிறைவு நாளான இன்று இந்த மனு கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்...
உலக சிறுவர் தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்று சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் சிறுவர் தின நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டது. வித்தியா என்ற பாடசாலை மாணவியின் மரணம், வடக்கில் இடம்பெற்று வரும் அதிகளவான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் போன்ற காரணிகளினால் பிரதேச சிறுவர்...
கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக்...
உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும். இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக்கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் அக்கட்சியின் அலுவலகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து...
இலங்கையில் அரச படைகளினால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அயராது பாடுபடுவோம்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். "தமிழர் நீதிக்கான...
கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நேற்று காலை மகாநாயக்க மற்றும் அஸ்கிரிய பீட தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட...
கிளிநொச்சி, ஏ9 பரந்தன் வீதியில் வயோதிபரின் சடலமொன்று பலத்த காயத்துக்குள்ளான நிலையில் நேற்று சனிக்கிழமை (12) காலை மீட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் பயணித்த குறித்த வயோதிபரை, வெள்ளிக்கிழமை இரவு வாகனமொன்று மோதிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் நேற்று காலை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வயோதிபர் யார்...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் இன்று 3 ஆம் நாள் பளையிலிருந்து தொடங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை ஆனையிறவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் பளையுடன் நிறைவு செய்யப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் பளையிலிருந்து யாழ். நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே...
தமிழகத்தின் திருச்சி சிறப்பு அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஐந்துபேர் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர். பின்னர் திருச்சி மத்திய...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ஆவரங்கால் சந்தியில் இன்று காலை 10.30 மணியளவில் மினி வான் – லொறி மோதி கொடூர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது – பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மினிவானும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிச் சென்ற லொறியுமே நேருக்கு நேர் மோதியதிலேயே...
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசியல் கலாசாரம் முன்னெடுக்கப்படும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முக்கியத்துவம்...
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை நீக்கிவிட்டு குமாரவெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தே தீருவோம். அதில் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை. நாம் விட்டுக்கொடுக்கவும்மாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரை சந்தித்து பேச்சு நடத்தியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தினேஷ் குணவர்த்தனவும் விமல்...
ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும்...
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் இருந்து மதுபானம் அருந்திய பெண் மற்றும் முதியவரை, நேற்று முன்தினம் வியாழக்கிழமை (10) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் மற்றும் 60 வயதுடைய முதியவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இருவரும், பொலிஸாரைக் கண்டதும் அதனை...
சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் இடம்பெறும் இம் மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா 25 ஆம் திகதி வௌ்ளிக்கிழமையும் தேர்த்திருவிழா 26 ஆம் திகதி சனிக்கிழமையும், சமுத்திரத் தீர்த்திருவிழா 27...
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குடும்பப் பிணக்குக் காரணமாக தனக்குத் தானே தீமூட்டி எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மரணமானார். யாழ்ப்பாணம், நாவாந்துறை மணற்திட்டைச் சேர்ந்த இளம்குடும்பப் பெண்ணான யூலியஸ் நிலாறோஸ் (வயது 21) என்பவரே மரணமானவராவார். தினமும் கணவர் குடித்துவிட்டு...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று சனிக்கிழமை அதிகாலை ஜெனிவா பயணமாகியுள்ளனர். ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாளைமறுதினம் திங்கட்கிழமை உரையாற்றவுள்ளதுடன், ஐ,நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் - ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்....
"இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை'' என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவும் இந்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய அரசு கூடிய...
இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’ என்று அந்த படத்தின் டைரக்டர் கணேசன் கூறினார். இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா...
யாழ் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் போரா முஸ்ஸிம் இனத்தவர்களின் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முதற்தடவையாக போரா முஸ்ஸிம் இன உலகத்தலைவர் செரன முகியதீன் சையூதீன் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தார். அவர் இன்று யாழ் ஆஸ்பத்திரி வீதியில் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போரா முஸ்ஸிம் பள்ளிவாசலை திறந்து வைத்தார். இப்பள்ளிவாசல்...
Loading posts...
All posts loaded
No more posts
