- Friday
- November 21st, 2025
99X Technology,d இணை ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம், SLASSCOM,d; 2015/16 பருவ காலத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற SLASSCOM வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம்/மென்பொருள் முகாமைத்துவம் ஆகியவற்றில் சேகரம் சுமார் 25 வருட கால சர்வதேச அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன், இவர்...
வடமாகாண விவசாய அமைச்சால் 23 விவசாயப் போதனாசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (14.09.2015) விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நியமனக்கடிதங்களை வழங்கி வைத்துள்ளார். வடமாகாண விவசாயத் திணைக்களத்தில் விவசாயப் போதனாசிரியர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 161. எனினும் 85 பேரே...
இலங்கையில் அரசியல் தீர்வு உட்பட முற்போக்கான சீர்த்திருத்தங்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலம் சாத்தியப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு புதிய அரசியல் யாப்புத் திருத்தத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கவென உள்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர் செயித் ராத் அல் உசைன் அவ்வாறு தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் நீண்ட உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில்...
வெள்ளைக்கொடி விவாகாரம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தேர்தல் கால இறுதி நாட்களிலும் அதன் பின்னரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு பதில் கொடுக்கும் வகையில் கொழும்பிருந்து இயங்கும் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்வில் கலந்துகொண்டு உண்மைகளைப் போட்டுடைத்தார் கஜேந்திரகுமார் அவர்கள்.
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போரளிகள் மீண்டும் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைக்கப்படுவது விசனத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தின் பின் ஸ்ரீலங்கா அரசிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் தமிழீழ...
சர்வதேச விசாரணை பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் நடை பயணம் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பு ஏ9 வீதியில் ஆரம்பமாகியது தொடர்ந்து இன்று 4 ஆம் நாள் யாழ்பாணத்தினை வந்தடைந்துள்ளது. சற்றுமுன்னர் செம்மணியினை வந்தடைந்து மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் தொடர்கிறது. இன்று பிற்பகல்...
பாலியல் ஊக்கி வில்லைகள் இலங்கையில் அதிகளவில் விற்பனையாவதாக தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவிக்கின்றது. வருடாந்தம் 20 மில்லியனுக்கும் அதிகமான வில்லைகள் இங்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ ஆலோசனையின்றி , பெரசிடமோல் விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக இவை விற்பனையாவதாகவும் அச்சபையின் தலைவர் தெரிவிக்கின்றார். நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இம்மாத்திரை உள்ளெடுக்கும் போது மரணம் சம்பவிக்கும்...
யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான கல்லூரியான யாழ் இந்துக்கல்லூரி 1890 இல் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம்(2015) தனது 125 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழைய மாணவர் சங்கம் முற்றாக புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இணைப்பு தொடர்பான செய்தி யாழ் இந்துக்கல்லூரியின் 125 வருட நிறைவும்...
மோட்டார் வாகனங்களுக்குரிய அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்தால் மட்டுமே புகைப்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட் டம் கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, புகைப்பரி சோதனை என்றால் என்ன என்ற தெளிவு பலரிடம் இல்லை. புகைப்பரி சோதனை செய்துகொள்ள வரும்...
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா நாளை செவ்வாய்க்கிழமை மாலை 05.30க்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. அத்துடன், இந்த நிகழ்வு நாளை மறுதினம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும் சுமார் 50 வரையிலான கதைப் படங்கள்...
கைதிகள் தினமான கடந்த சனிக்கிழமை சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக்கோரி முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மேற்படி போராட்டம் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவூ தனியார் பஸ் நிலையத்தில் ஒன்று...
நீதிக்கான தேடல் ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கெலம் மக்ரே அறிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நோக்கில் நீதிக்கான தேடல் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்ற வழமையான மறுப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆவணப்படத்திற்கு அடிப்படையாக...
சிவனொளி பாத மலை எந்த மாகாணத்துக்குரியது? என நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களென விடையளித்துள்ளனர். நில அளவையியல் திணைக்களத்தின் படி, முறைப்படி சிவனொளி பாத மலையானது சப்ரகமுவ மாகாணத்துக்குரியது என்ற போதிலும் வரைபடங்களின்படி இது மத்திய மாகாணத்துக்குரியதாகக் கருதப்படுகின்றது. எனவே, இவ்விடயத்தில் சிக்கல்...
இன்னும் இரண்டு மாத காலத்தில் அவகாசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற விடயத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து மத அலுவல்கள் அமைச்சர் .எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். புதிய அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் முதல் தடைவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில்...
மது விற்பனை நிலையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். மூளாய் பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தின் பின்பாக உள்ள மறைவிடம் ஒன்றில் இருந்து இந்த ஐந்து பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு குறிப்பிட்ட மது விற்பனை நிலையத்தில் சூதாட்டம் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து தீடீரென அதிரடி நடவடிக்கையை...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறவுள்ளது. போர்க்குற்ற விசாரணை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு...
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் ஜெனிவாவில் இந்தியாவின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்காகவும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை இந்தியா பயணமாகவுள்ளார். இன்று இந்தியாவின் தலைநகர் டில்லிக்குப் பயணமாகும் பிரதமர்...
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று(திங்கட்கிழமை) தொடங்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில்...
நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகளில் நிலவும் சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் இவ்வருட முடிவிற்குள் நிரப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார். கிராமப்புற கஷ்டப் பிரதேச பாடசாலைகளிலேயே அதிகளவான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், கணிதம், விஞ்ஞானம், பௌதீகவியல், தொழில்நுட்பவியல், பாடங்களுக்கு கூடுதலான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
