Ad Widget

இனவழிப்பில்லை என்று எமது தரப்பினர் கூறுவது வேதனையளிக்கிறது – அனந்தி

இலங்கையில் கடந்த கால யுத்தத்தின் போது, தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனவழிப்பில்லை என்று, எமது தரப்பினர்கள் ஜெனிவாவில் தெரிவித்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ananthi_sashitharan

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

வடமாகாண சபையால் எந்த விடயத்தையும் செய்ய முடியாது, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளால் எவ்வித பயனும் இல்லை என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூறியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘இனவழிப்பு தொடர்பான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என்று எவருக்கும் கூற முடியாது. தமிழ்நாட்டுச் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு பிரேரணையே அடிப்படையாக அமைந்தது.

ஐ.நா.விலும் என்றோ ஒருநாளைக்கு இப்போது நிறைவேற்றப்பட்ட பிரேரணை தாக்கத்தைச் செலுத்தலாம்’ என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Related Posts