இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் விசைப்படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 7.30 மணியளவில் யாழ். மாவட்ட மீனவர்களினால் யாழ். கடற்தொழிலாளர் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 15 மீனவர்கள் சமாசங்களைச் சேர்ந்த மீனவச்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தற்போது யாழ்.ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ். மாவட்ட செயலகத்திற்குச் சென்று அரச அதிபர் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றை கையளித்து அதன்பின்னர் இந்திய துணைத்தூதுவர் நட்ராஜிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.