Ad Widget

வித்தியா கொலைக்கு சிறப்பு நீதிமன்றம்? நாடாளுமன்றில் கேள்வி

நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

எம்.பிக்கள் பதவிப்பிரமாணம், சபாநாயகர் அறிவிப்பு, 23/2 இன் கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் அமைச்சின் அறிவிப்பு இடம்பெற்றது.

இதன் போது கொட்டிதெனியவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா என்ற சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன சபைக்கு விளக்கமளித்தார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட அநுரகுமார எம்.பி., “வடக்கில் வித்தியா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்ட போதும் இப்படியான உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கே பயணம் மேற்கொண்டு விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். அதன் நிலை தற்போது எவ்வாறு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

Related Posts