தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026: பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி அறிவிப்பு!
தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026 இன் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்டக் கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. திலீபன் ஆவணக்காப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்துத் தமிழ் மாணவர்களும் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகள் தொடர்பான விரிவான விபரங்கள் பின்வருமாறு:
போட்டிப் பிரிவுகள்:
-
பிரிவு 01: தரம் 06 முதல் தரம் 09 வரை
-
பிரிவு 02: தரம் 10 மற்றும் தரம் 11
-
பிரிவு 03: தரம் 12 மற்றும் தரம் 13
கட்டுரைக்கான தலைப்புகள்:
-
ஈழத்தமிழர்களது அபிலாசைகள் தொடர்பான தற்கால தலைமுறையின் புரிதல்
-
பூகோள அரசியலும் தமிழர் அரசியலுரிமைப் போராட்டமும்
-
இலங்கையின் இன நல்லிணக்கமும் அதற்கான சாதக, பாதக சூழ்நிலைகளும்
-
ஈழத்தமிழர்களது கள அரசியலும் வலைத்தள அரசியலும்
-
அகிம்சை வழிப் போராட்டமும் அதன் மீதான உலகின் பார்வையும்
-
கல்வி – சிறுபான்மை சமூகத்தின் இன்னுமொரு ஆயுதம்
முக்கிய விதிமுறைகள் மற்றும் வடிவமைப்பு:
-
சுய ஆக்கம்: கட்டுரைகள் 1000 முதல் 1500 சொற்களுக்குள் முழுமையாக சுய ஆக்கமாக அமைந்திருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.
-
தாள் விபரம்: A4 அளவு வெள்ளை நிறத் தாள் பயன்படுத்தப்பட வேண்டும். 1 அங்குல (1″) பக்க விளிம்பு (Margin) பேணப்பட வேண்டும்.
-
கணினி தட்டச்சு (Typing Layout): Bamini எழுத்துருவில் (Font), 1.5 வரி இடைவெளியில் (Line Spacing) தட்டச்சு செய்யப்பட வேண்டும். (தலைப்பு – Size 16, உபதலைப்பு – Size 14, உள்ளடக்கம் – Size 12).
-
விபரங்கள்: ஆக்கத்துடன் போட்டியாளரின் முழுமையான சுயவிபரமும், வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கமும் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.
பரிசுகள் (ஒவ்வொரு பிரிவிற்கும்):
-
முதலாம் இடம்: வெற்றிக்கிண்ணம் + தங்கப்பதக்கம் + சான்றிதழ்
-
இரண்டாம் இடம்: வெற்றிக்கிண்ணம் + வெள்ளிப்பதக்கம் + சான்றிதழ்
-
மூன்றாம் இடம்: வெற்றிக்கிண்ணம் + வெண்கலப்பதக்கம் + சான்றிதழ்
-
சிறப்புப் பரிசுகள்: சிறந்த 5 கட்டுரையாளர்களுக்கு நினைவுப்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் இறுதித் திகதி:
ஆக்கங்கள் அனைத்தும் 2026 செப்டம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்குப் பதிவுத் தபால் (Registered Post) மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
வரதராஜன் பார்த்திபன், இணைப்பாளர், திலீபன் ஆவணக்காப்பகம், இல. 140, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் 077 299 9699 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
