கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை ஊழல்வாதி என கூறிய அர்ச்சுனா எம்.பியின் கருத்தால் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இருந்து அரச அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் சந்திரசேகரன் மற்றுமு் எம்பிக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி பதற்றமான சூழல் ஏற்பட்டது .அதனை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்போது கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
குறித்த சுட்டத்தில் விவசாயம் தொடர்பில் ஆரயப்பட்டது. இதன்போது கிளிநொச்சி திருவையாறு பகுதியில் விவசாய செய்கை தேசிய வேலைத்திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பா ம உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சாட்டினார்.குறித்த விடயம் தொடர்பில் விமர்சன கருத்துக்களை முன்வைத்த அர்ச்சுனா இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதன் பின் அதிகாரிகள் வெளியேறியதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
Videos https://www.facebook.com/share/v/1G4cbsbCgP/