வடக்கு மாகாண பொதுச்சேவையிலுள்ள குறிப்பிட்ட பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் – 2026 தொடர்பான அறிவித்தலை வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இப்பதவி இடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026.07.28 ஆகும்.
விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பதவிகள்:
-
தடுப்பூசி ஏற்றுநர் தரம் III (Vaccinator Grade III):
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் இப்பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026.
-
மர்த்தனவியலாளர் தரம் III (Masseur Grade III):
வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் கீழ் காணப்படும் இப்பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026.
முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
இது தொடர்பான முழுமையான விளம்பர அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இற்குச் சென்று, அதன் வழிநடத்தலின் படி (Exam and Recruitment – Advertisement) பார்வையிட முடியும்.
தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமது விண்ணப்பங்களை உரிய முறையில் அனுப்பிவைக்க முடியும் என மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.