- Friday
- November 21st, 2025
வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியை வடமாகாணத்தின் மத்தியாகக் கொள்ளப்படும் மாங்குளத்தில் அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குளம் பகுதியில் வடமாகாண சபை கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணியை, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் திங்கட்கிழமை (14) பார்வையிட்டுள்ளனர். மாங்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர்...
நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சிறுவர்களையும் மகளிர்களையும் பாதுகாப்பதற்குமான சட்டத்தை மிகவும் கடினமாக்கப்படவேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். இசுருபாயவில் அமைந்துள்ள மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (15) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...
இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குநர் கலம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த கலம் மக்ரே, அமெரிக்க மற்றும் இலங்கை அரசை பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது.சீனாவுக்கு ராஜபக்ச...
உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை சம்பந்தமாக நீர்வேலியில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்...
தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. 22 கி.மீ...
இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுகி, தீர்வு காண்பது என தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இலங்கை பிரதமராக நான்காவது முறையாக ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, தனது முதலாவது வெளிநாட்டுப்...
மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறுப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியற் கட்சிக்கு அவர்கள் வெற்றி பெற்ற மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பதவி வழங்க அரசு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமையால், கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் எனக்கு முரன்பாடு...
கோர யுத்தத்தால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் சந்தித்த எமது மக்களுக்கு நீதி விசாரணை நடாத்தப்பட்டு, உண்மைகள் கண்டறியப்படுவதோடு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான பரிகாரமும் காணப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களுக்கு...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேக நபர்களான 9 பேரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டார். குறித்த சந்தேக நபர்களை இன்று ஊர்காவாற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே ஊர்காவற்றுறை நீதவான் லெனின் குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை போதிய திருப்தியில்லாமல் இருப்பதால் பெருமளவான மக்கள் கண்டிக்குச் செல்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இதர தனியார் வைத்தியசாலைகளிலும் கண் சிகிச்சை மற்றும் கண் சத்திரசிகிச்சை என்பன இடம்பெறுகின்றன. எனினும், ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குறைவாகவுள்ளனர். இதனால், யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை செய்பவர்கள் பலர் கண்டியிலுள்ள தனியார்...
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் அதனை செலுத்தி வந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். கைதடிச் சந்திக்கு அண்மையாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் கைதடியை சேர்ந்தவரான சிவலிங்கம் தீபன் (வயது 31) என்பவர் மரணமானார். ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
இன்று செவ்வாய்க்கிழமை 15ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் சர்வதேச விசாரணையை வலியூறுத்தியூம் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு கையொப்பங்களை இட்டனர். மேலும் படங்களுக்கு..
இலங்கை முழுவதும் சுமார் 2,000 பாடசாலைகள் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவிதமான மலசலகூட வசதிகள் இன்றி சுமார் 500 பாடசாலைகள் உள்ளதுடன், ஒரு மலசலகூடத்துடன் மாத்திரம் 2,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார். கணினி, ஆய்வுக்கூடம், நூலகம் இல்லதாக நிலையில்...
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் அனுபவங்களையும் 'யு டேர்ண்'களையும் வைத்து, தம்மை எடைபோட வேண்டாமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாண்டுமார்ச் மாதத்தில் இடம்பெற்ற 28ஆவது மனித...
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதற்கு, ஒன்றரை ஏக்கர் காணியை அளவிடும் பணி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் கைவிடப்பட்டுள்ளது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கோப்பாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் கீழ் கோப்பாயில் இருந்து கைதடி செல்லும் வீதியில் சுமார் ஒரு ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது....
வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், 13ஆம் திகதி உதயமாகியுள்ளது. யாழ்ப்பாண ஊடக மையத்தில் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் போதே இது உருவாக்கப்பட்டது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தகவல்...
நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர் தெரிவித்தார். நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம்...
ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க மாட்டோம், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அரசியற் தீர்வு வேண்டும், மனித உரிமைப் பேரவை மூலம் சர்வதேச நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நான்கு நாற்களாக இடம்பெற்று வந்த நடை பணயப் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
Loading posts...
All posts loaded
No more posts
