- Friday
- November 21st, 2025
நெடுந்தீவைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாண கிளை மற்றும் UTE ஆகியன இணைந்து நீர் வழங்கல் மற்றும் இரு புதிய கடல் நீர் சுத்திகரிக்கும் (Reverse Osmosis) நிலையங்களை நிறுவ முன்வந்துள்ளன. நெடுந்தீவுப் பகுதியில் தூய்மையான குடிநீருக்காக காணப்படும் தேவையை நிவர்த்தி செய்யும்...
இம்முறை க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக கணிதப் பாடத்துக்கான ஆற்றலை மேம்படுத்தும் உன்னத திட்டம் ஒன்றை கொமர்ஷல் வங்கி தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Optimized IT என்ற நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இணைய வழி மூலமாக பல் தெரிவு...
2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் இறப்பத்தாட்சிபடுத்தும் அதிகாரத்தை பதிவத்தாட்சி ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் பயங்கரவாததாக்குதல், மக்கள் புரட்சி மற்றும் இயற்கை...
கொத்து கொத்தாய் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட தமிழர்கள்... குழந்தைகளும், பெண்களும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து மடிந்ததை காண்பவர்களின் கண்களில் மட்டுமல்ல நெஞ்சங்களிலும் ரத்தத்தை வரவழைக்கும் ஆவணபபடம்தான் 'இலங்கை - நீதியைத் தேடி'. இலங்கை இறுதிப்போரில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது "இலங்கை-நீதியைத் தேடி" என்ற ஆவணப்படம். போர் இறுதிக்காலங்களில்...
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற குளங்களில் ஒன்றான பிரமந்தனாறு குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. பிரமந்தனாற்று வடிநிலத்தின் குறுக்காக அணைக்கட்டை உருவாக்கியே பிரமந்தனாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது. இக்குளத்திலிருந்து பெறும் நீர்ப்பாசனத்தின் மூலம் 600 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், நிலக்கடலை, வெங்காயம் போன்ற மறுவயற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக உள்ள பகுதியாக...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையின் அறிக்கைக்கு, இலங்கை தனது பதிலை வழங்கியுள்ளது. அவ்வறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்குப் போதிய கவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இது தொடர்பில் மேலதிகக் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள்: மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினது...
சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியவாறு புதிய சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொடதெனியவைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த விடயங்களுக்கு இன்று...
தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு...
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான நவீல்ட் பாடசாலை அதிபருக்கு எதிரான சாட்சியங்கள், வாய்பேச முடியாதவர்களாக இருப்பதால், அவர்களுடைய சாட்சி பதிவு செய்வதற்கு சைகை மொழிபெயர்பாளர் ஒருவருரை பெறுவதில் தாமதம் உள்ளதாக சாவகச்சேரி பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். வெகுவிரைவில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு பூரணமான அறிக்கையினை சமர்பிக்குமாறும், வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் எனவும் சாவகச்சேரி...
போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறும்...
மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட பொது வைத்தயிசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரனுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் இதனை நிறுத்த தன்னாலான முயற்சியை மேற்கொள்வேன் எனவும் வட மாகாண சுகாதார அமைச்சர்...
போர்க்குற்ற விசாரணைகளை மேற் கொள்வதற்கு கலப்பு நீதிமன்றம் நியமிப்பதினால் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கை தொடர்பாக இன்று வௌியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,...
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த் 14 ந்தேதி தொடங்கியது.ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வருகிற 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயித் அல்...
உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட வெளிநாட்டு மணப்பெண் நேற்று இரவு கடத்தபட்டோரால் பெண்ணின் வீட்டில் விடப்பட்டார். இதனைதொடர்ந்து இக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கனடா நாட்டில் இருந்து வந்த 28 வயது யுவதிக்கு...
டக்ளஸ் தேவானந்தாவின் வழக்குச் செலவை வழங்குமாறு உதயன் உரிமையாளர், பிரதம ஆசிரியருக்கு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடுத்திருந்த அவதூறு வழக்கு நேற்று தொடர் விசாரணைக்கு வந்திருந்தபோதே மேற்படி உத்தரவை யாழ் மாவட்ட நீதிபதி கஜநிதிபாலன் விடுத்திருந்தார். மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உதயன்...
நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. விஷேடமாக ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1929 என்ற இலக்கத்துக்கும் மகளிருக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1938 என்ற இலக்கத்துக்கும் அழைப்பை ஏற்படுத்தி...
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இந்த...
நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையில் சோடாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் விசனமடையச் செய்துள்ளது. தமிழ் மக்களின் வீரத்தை வெளிப்படுத்திய சங்கிலி மன்னன் கையில் ஏந்தியிருக்கின்ற வாளில் சோட நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் மாட்டப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கு வருகின்ற மக்களுக்கு தமது குளிர்பானம் தொடர்பில் விளம்பரம் செய்வதற்காக குறித்த நிறுவனத்தின்...
Loading posts...
All posts loaded
No more posts
