சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டங்கள்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட செயற்றிட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

vethanayakan

சிறுவர், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், போதைவஸ்து பாவனை ஆகியவற்றுக்கு எதிராக முன்னரும் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம்.

இது தொடர்பான அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடலை மேற்கொண்டோம். பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுடனான ஒரு கலந்துரையாடலை நடத்தி, அதன் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என அக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

சமூக சீர்கேட்டுச் சம்பவங்கள் வடக்கில் மட்டுமல்லாமல், தென்னிலங்கையிலும் தற்போது அதிகரித்துள்ளன. இவ்வாறான சமூகச் சீர்கேடுகளை நிறுத்துவதற்கு, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், ஓர் இடத்தில் அதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றார்.

சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் முறையிடுவதற்கு இலகுவான தொலைபேசி இலக்கம் ஒன்றை கோரியுள்ளோம். கிடைத்தவுடன் அது அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Related Posts