Ad Widget

கம்பஹா சிறுமியின் படுகொலைக்கு எதிராக தெல்லிப்பளையில் ஆர்ப்பாட்டம்

கம்பஹா கொடகதெனியா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் அண்மைக்காலத்தில் நாட்டின் பலபாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது தெரிவதே.

seya-alaveddy-tellippalai

அதேபோல் அளவெட்டியிலுள்ளவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் இளைஞர்களால்சோயாவின் துர்மரணம் சம்பந்தமாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி முன்றலில் இருந்து காலை 9.15 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி வடமாகாணசபை உறுப்பினர் திருமதி.அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கே.சதீஸ் ஆகியோர் தலைமை தாங்கி வர, தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகள் மூலமான பதாதைகளைத் தாங்கிய வண்ணம் ஊர்வலமாகச் சென்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது.

பிரதேச செயலாளர் சிறிமேகன் விடுப்பில் இருந்தால் மகஜர் ஒன்றை நிர்வாக உத்தியோகத்தர் திருச்செல்வம் ராஜினியிடம் கையளித்தார்கள்.

சிங்கள நாட்டில் நடைபெற்ற துர்ப்பாக்கிய நிலையைக் கண்டித்து, முதன்முதலில் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறுமிக்கு விழைவிக்கப்பட்ட துன்பகரமான நிகழ்வைக் கண்டித்து, இளம் பையன்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது இந்தப் பகுதியில் வாழும் இளைஞர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகிறது

இன்று யாழ் பல்கலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts