யாழில் மக்கள் நலன் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கூட்டம்

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 05 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலன் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவகத்தின் ஏற்பாட்டிலும் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இதில் கிராம அபிவிருத்தி, சழூக நலன் மேம்பாடுகள், உட்கட்டமைப்புகள் மற்றும் பின் தங்கிக் காணப்படும் விவசாய நிலங்களின் மேம்படுத்தல், குளங்கள், போக்குவரத்துக்கான கிராமபுற பாதைகள் புணர்நிர்மாணம், போன்ற செயற்பாட்டினை முன்னேடுத்தல் தொடர்பாகவும் மேலும் யாழ் மாவட்டத்தில் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவைகள் குறித்தும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன..

எதிர்வரும் காலப் பகுதியில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தினை முன்னேடுக்கும் வகையில் இக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மாளியகந்த, தெரிவித்தார்.

Related Posts