Ad Widget

முழுமையான சர்வதேச விசாரணையே தேவை – தமிழர் செயற்பாட்டு குழு கோரிக்கை

ஐநா ஆணையாளரின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையினை வெல்வது எப்படி என்பது குறித்து கரிசனை கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை உள்ளகப்பொறிமுறையினை நிராகரித்த ஆணையாளரின் காரணங்களினை வரவேற்றுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு(TACIAM)  முழுமையான சர்வதேச விசாரணையே தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு இன்று மாலை 5 மணியளவில் திருநெல்வேலியில் ஊடகவியலாளர் மாநாட்டினை நெடாத்தியிருந்தது .

மக்களின் வேண்டுகோள் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் உண்மைப்பிரதிகள் விரைவில் ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும். இதுவரை ஒருலட்சத்தி ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட  கையெழுத்துக்கள் உள்ளகப்பொறி முறையினை நிராகரித்து சர்வதேச நீதி கோரி பெறப்பட்டுள்ளதாகவும் கையெழுத்து போராட்டத்தில் பங்கெடுத்து சர்வதேசப்பொறிமுறைக்கான அழுத்தங்களை சர்வதேசத்திற்கு வழங்குவதற்கு உதவிய மக்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அதன் தலைவர் பேராசிரியர் வி பி.சிவநாதன் தெரிவித்தார்.

இம்மாத இறுதியில் ஐக்கியநாடுகள் சபையின்  அமர்வில் அமெரிக்காவால் கொண்டு வரப்படும் என எதிர்பாtaciamர்க்கப்படும் தீர்மானம் முழுமையான சர்வதேசப்பொறிமுறையினையே வலியுறுத்தவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஆணையாளரினால் உள்ளகப்பொறிமுறையினை நிராகரிப்பதற்காக கூறப்பட்ட காரணங்கள் இல்லாமல் செய்யப்படாமல் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகின்ற நிலையில் எந்தவகையிலேனும் உள்ளகப்பொறிமுறையினை தீர்மானம் வலியுறுத்துவதை நாம் எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.

சர்வதேச நீதிபதிகள் பங்கேற்கும் சிறப்பு நீதிமன்ற முறைமை எந்தவகையிலானது அதன் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று தெளிவுபடுத்தப்படும் வரை தம்மால் அந்த சிறப்பு நீதிமன்ற பொறிமுறை குறித்து கருத்து தெரிவிப்பது இயலாதது என்றும் குறிப்பிடடார்.

தொடர்ச்சியாக தாயகத்திலும் சர்வதேசத்திலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாகவே  ஆணையாளரின் சிபார்சில் மக்களின் நம்பிக்கையினை எந்த வகையிலும் வெல்ல முடியாத உள்ளக பொறிமுறை நிராகரிக்கப்பட்டமையினை சுட்டிக்காட்டிய பேராசிரியர் உள்ளக பொறிமுறை ஊடான விசாரணையினை எந்த வழிவகை ஊடாவும் நீதி பெறுவதற்கான முறையாக மக்கள் மீது திணிப்பதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் மக்கள் உள்ளக நீதித்துறை மீது நம்பிக்கை அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்  என்றும் தெரிவித்தார்.முன்வைக்கப்படும் பொறிமுறை மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்

சர்வதேச நீதி விசாரணையோ சர்வதேச நீதிமன்றமோ இலங்கையிலா வெளியிலா அமைவது என்பதில் பிரச்சனையிலை என்றும் அதன் மூலமாக பாதிக்கப்பட்ட  மக்களின் நம்பிக்கையினை முழுமையாக வென்ற நீதி விசாரணை நடைபெற வேண்டும் அதன் மூலம் உண்மையான  நீதி பெறப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என் அமைப்பின் செயலாளர் கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்தார்.

தமது அமைப்பின்நோக்கம் தனிப்பட்டவர்களேயோ கூட்டமைப்பினையோ சாடுவதல்ல என்றும் மற்றவர்கள் என்ன செய்தார்கள் செய்கின்றார்கன் என்பதற்கு அப்பால் தமது அமைப்பு என்ன சொல்கின்றது என்பதே முக்கியம் என்றும் அதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அடுத்தகட்டமாக மேற்கொண்டு அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ள செய்ற்பாடுகள் தொடர்பில் தாம் கலந்துரையாடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்

Related Posts