யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.