- Thursday
- November 20th, 2025
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்களே குற்றம் குறித்து விசாரணை செய்ய வேண்டியதில்லை. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்கள்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய இல்லம் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் திருத்த வேலைகள் சில இருப்பதனால் மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் அங்கு குடியேறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விஜயராம மாவத்தை உள்ள வீடு ஒன்றே முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வமாக கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது என்பது...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா விசாரணை...
அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், இலங்கையில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்படும் அனுபவம் ஏற்பட்டிருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலிஸ்...
மன்னார் மாவட்டத்தில் சிறுபோகத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட பயறுச்செய்கை அமோக விளைச்சலைக் கண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (04.09.2015) மன்னார் நானாட்டனில் இடம்பெற்ற வயல்விழாவில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார். பெரும்போகத்தில் நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளில் பெரும்பாலானோர் சிறுபோகத்தில் ஈடுபடுவதில்லை. நெற்செய்கைக்கு அதிகளவில் நீர் தேவைப்படுவதால் சிறுபோகத்தில் அரிதாகவே நெற்செய்கை...
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை...
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த...
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வருகை தருவது தொடர்பில் புதிய ஆட்சிபீடத்தை எற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என வடமாகாண மீனவ சம்மேளன அமைப்பு தெரிவித்துள்ளது. வடமாகாண மீனவ சம்மேளன அமையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட மீனவ கடற்றொழில் அமைப்புகளின் தலைவர்களுடான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. யாழ் நீரியல் வளத்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதிக் குழுக்களின் தலைவர் பதவிகளை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். மாறாக நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை சர்வதேச கண்களுக்கு காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை பாதுகாக்கும்...
இந்த தேசிய அரசாங்கத்திலாவது தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமையப்பெற்றுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். கடந்த காலத்தில் மக்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளுக்கு அமைய இப்போதும் ஒரு கூட்டு அரசாங்கம் அமையப்பெற்றுள்ளது....
இணுவில் கந்தசாமி கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த முகமுடிக் கொள்ளையர்கள் அங்கிருந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான...
புத்தூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர், மாணவியின் கன்னத்தில் அறைந்தமையினால் மயக்கமுற்ற மாணவி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாற்று பாடப்புத்தகம் கொண்டு வராத மாணவிக்கு தனது புத்தகத்தை மாற்றிக் கொடுத்து உதவியமையை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவியின் கன்னத்தில் கடுமையாக...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது. இந்த வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12.11க்கு ஆரம்பமாகி 13.42க்கு நிறைவுக்கு வந்தது. இந்த பதவியேற்பு வைபவத்தில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்... வருகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் 12.10க்கு வருகைதந்தனர்....
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த தலைமையில் இடம்பெயர்ந்து தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூயின் ஆரம்பப் பிரிவுப் பாடசாலை அமைந்துள்ள வளாகப் பகுதியில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் காங்கேசன்துறை...
இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச பொறிமுறையுடன் கூடிய விசாரணை அவசியம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையின் கட்டடத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்....
அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்கள் ஊழல் மோசடி செய்து மக்கள் மத்தியில் மறைந்திருக்க முடியாது என்பதால் அனைவரும் லஞ்ச, ஊழலில் ஈடுபடாது பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் பயனாக அரச கூட்டுத்தாபனம்,...
நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் பின்னர்,...
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக இன்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக யாழ்.நகர்ப்பகுதி, திருநெல்வேலி, பருத்தித்துறை நகர், பொன்னாலை மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் குறித்த கையெழுத்து...
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்கட்சியின் பிரதமகொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது. இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின் அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக கதாநாயகரிடம் கூறியுள்ளார். இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை...
Loading posts...
All posts loaded
No more posts



